கடைசி ஓவரில் வெற்றி பெற்ற நைட் ரைடர்ஸ் அணி

0
178

உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் 200க்கும் மேற்பட்ட நாடுகளில் பரவி மனித இனத்துக்கே பெரிய சோகத்தை ஏற்படுத்தி வருகிறது. மேலும் இந்த வைரஸால் சேவைகள் அனைத்தும் முடக்கத்தில் உள்ளன அந்த வகையில் அனைத்து வித போட்டிகளுக்கும் பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது. கடந்த மூன்று மாதங்களாக எந்த வித போட்டியும் நடக்காத நிலையில் இங்கிலாந்தில் மட்டும் ரசிகர்கள் யாரும் இன்றி போட்டிகள் நடத்தப்பட்டு வருகின்றன.  ஏற்கனவே இங்கிலாந்து – வெஸ்ட் இண்டிஸ் அணி தொடர் முடிந்த நிலையில் தற்போது இங்கிலாந்து – பாகிஸ்தான் இடையான மூன்று டெஸ்ட் போட்டிகள் மற்றும் மூன்று 20 ஓவர் போட்டிகள் கொண்ட தொடர் நடந்து வருகிறது.

அந்த வகையில் மேற்கு இந்திய தீவு அணியில் நடைபெறும் கரீபியன் லீக் 20 ஓவர் போட்டி நடந்து வருகிறது. நேற்று நடந்த ஆட்டத்தில் நைட் ரைடர்ஸ் அணியும், பார்படாஸ் அணியும் மோதின. டாஸ் வென்ற பார்படாஸ் அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. முதலில் பேட்டிங் செய்த நைட் ரைடர்ஸ் அணி டேரேன் பிராவோ 54 ரன்களை குவித்தார். அந்த அணி 20 ஓவர் முடிவில் 3 விக்கெட் இழப்புக்கு 185 ரன்களை குவித்தது. பின்னர் களமிறங்கிய பார்படாஸ் அணி  6 விக்கெட் இழந்து 166 ரன்கள் மட்டுமே எடுத்தது. இதனால் நைட் ரைடர்ஸ் அணி 19 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. அந்த அணியில் அதிக பட்சமாக சார்லஸ் 52 ரன்களை குவித்தார்.

Previous articleபட்டியலின ஊராட்சி மன்ற தலைவரை “நீயெல்லாம் இந்த chair-ல் உட்காரலாமா?” என்று பேசி கொலை மிரட்டல்
Next articleகரீபியன் லீக்: நிகோலஸ் பூரன் அரைசதம் வீண்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here