கரீபியன் லீக்: நிகோலஸ் பூரன் அரைசதம் வீண்

0
227

உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் 200க்கும் மேற்பட்ட நாடுகளில் பரவி மனித இனத்துக்கே பெரிய சோகத்தை ஏற்படுத்தி வருகிறது. மேலும் இந்த வைரஸால் சேவைகள் அனைத்தும் முடக்கத்தில் உள்ளன அந்த வகையில் அனைத்து வித போட்டிகளுக்கும் பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது. கடந்த மூன்று மாதங்களாக எந்த வித போட்டியும் நடக்காத நிலையில் இங்கிலாந்தில் மட்டும் ரசிகர்கள் யாரும் இன்றி போட்டிகள் நடத்தப்பட்டு வருகின்றன.  ஏற்கனவே இங்கிலாந்து – வெஸ்ட் இண்டிஸ் அணி தொடர் முடிந்த நிலையில் தற்போது இங்கிலாந்து – பாகிஸ்தான் இடையான மூன்று டெஸ்ட் போட்டிகள் மற்றும் மூன்று 20 ஓவர் போட்டிகள் கொண்ட தொடர் நடந்து வருகிறது.

அந்த வகையில் மேற்கு இந்திய தீவு அணியில் நடைபெறும் கரீபியன் லீக் 20 ஓவர் போட்டி நடந்து வருகிறது. நேற்று நடந்த மற்றொரு ஆட்டத்தில் அமேசான் வாரியர்ஸ் அணியும், செயின்ட் லூசியா அணியும் மோதின. டாஸ் வென்ற லூசியா அணி பேட்டிங்கை தேர்வு செய்தது. அந்த அணி 7 விக்கெட் இழப்புக்கு 144 ரன்கள் அடித்தது. அந்த அணியில் அதிக பட்சமாக ரோஸ்டன் சேஸ் 66 ரன்களை குவித்தார். பின்னர் களமிறங்கிய அமேசான் வாரியர்ஸ் அணி 8 விக்கெட் இழந்து 134 ரன்கள் மட்டுமே எடுத்தது இதனால் செயின்ட் லூசியா அணி 10 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. அந்த அணியில் அதிக பட்சமாக நிகோலஸ் பூரன் 68 ரன்களை குவித்தார்.

Previous articleகடைசி ஓவரில் வெற்றி பெற்ற நைட் ரைடர்ஸ் அணி
Next articleபக்தர்களுக்கு ஓர் நற்செய்தி!! தரிசனத்திற்கு இன்று முதல் முன்பதிவு..!!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here