பேரிடராக அறிவித்த அதிபர் டோனல்ட் டிரம்ப்

0
133

அதிபர் டோனல்ட் டிரம்ப் அமெரிக்காவின் கலிஃபோர்னியா மாநிலத்தில் மூண்டுள்ள காட்டுத்தீயை, பேரிடர் என்று அறிவித்துள்ளார். அங்கு பற்றி எரியும் தீயை அணைக்கத் தேவையான நிதியை, மத்திய அரசு வழங்குமென அவர் அறிவித்தார். சுமார் ஒரு மில்லியன் ஏக்கர் பரப்பளவுள்ள இடத்தில் காட்டுத் தீ மூண்டுள்ளது. அதைக் கட்டுப்படுத்த, 14,000க்கும் அதிகமான தீயணைப்பாளர்கள் போராடி வருகின்றனர்.

பலத்த காற்று வீசும் என்று முன்னுரைக்கப்பட்டிருப்பதால், காட்டுத் தீ, மக்கள் நெருக்கம் மிகுந்த இடங்களுக்குப் பரவக் கூடுமென்ற அச்சம் எழுந்துள்ளது. காட்டுத் தீ காரணமாக, கலிஃபோர்னியா மாநிலத்தில் புகை மூட்டமும் ஏற்பட்டுள்ளது. காட்டுத் தீயால் குறைந்தது 6 பேர் மாண்டதோடு பல்லாயிரம் பேர் வீடுகளில் இருந்து வெளியேற்றப்பட்டுள்ளனர்.

Previous articleஇவருடைய தலைமையிலான அணியே சிறந்தது?
Next articleபிரபல நடிகையின் குடும்பத்திற்கு ஏற்பட்ட சோகம்!!