மகாத்மா காந்தியின் மூக்குக்கண்ணாடி இத்தனை ஆயிரம் டாலருக்கு விலை போனதா?

Photo of author

By Parthipan K

1920களில் தென்னாப்பிரிக்கப் பயணம் ஒன்றை மேற்கொண்டார் காந்தியடிகள்  அங்குச் சந்தித்தவரின் குடும்பத்தில் சில தலைமுறைகளாக அந்த மூக்குக்கண்ணாடி இருந்துள்ளது. மூக்குக்கண்ணாடி ஒன்று சுமார் 340,000 டாலருக்கு ஏலத்தில் விற்கப்பட்டது. கடைசியாக அந்தக் குடும்பத்தைச் சேர்ந்த வயதானவரும் அவரது மகளும் அதற்குச் சொந்தக்காரர்கள் ஆனார்கள். அவர்கள் அந்த மூக்குக்கண்ணாடியை ஏலம் எடுப்பவரிடம் விற்றார்கள். ஏலம் எடுப்பவரான திரு ஆண்ட்ரூ ஸ்டோ அந்த மூக்குக் கண்ணாடியின் மதிப்பை வயதானவரும் அவரது மகளும் அறியவில்லை எனக் கருதினார்.

அவர்கள் அந்த மூக்குக்கண்ணாடியைத் தங்கள் அஞ்சல் பெட்டியில், உறை ஒன்றில் அப்படியே சில நாட்கள் வைத்ததாகவும் அவர் தெரிவித்தார். மேலும் வயதானவர் அதன் விலை வெறும் 19,000 டாலர் எனக் கருதியபோது ஸ்டோ அதிர்ச்சியடைந்தார். 50 ஆண்டுகளாக வீட்டில் கிடந்த மூக்குக்கண்ணாடியின் மூலம் எப்படியோ வயதானவரும் அவரது மகளும் பெருமளவில் பணம் பெற்றுள்ளனர்.