சுஷாந்த் சிங் வழக்கு: போதைப்பொருள் வியாபாரியுடன் தொடர்பு என சுப்பிரமணியன் சாமி பரபரப்பு தகவல்

0
136

சுஷாந்த் சிங் வழக்கு தொடர்பாக சிபிஐ விறுவிறுப்பாக விசாரணை நடத்தி வரும் நிலையில், பாஜகவின் மூத்த தலைவரான சுப்பிரமணியன் சுவாமி பரபரப்பான தகவல் ஒன்றினை வெளியிட்டுள்ளார்.

பாலிவுட்டின் முன்னணி நடிகரான சுஷாந்த் சிங் ராஜ்புத் இறப்பானது, தற்கொலை அல்ல கொலை என சுப்பிரமணியன் சுவாமி கூறியிருந்தார். இதுதொடர்பாக சில வாரங்களுக்கு முன் சிபிஐ விசாரணை நடத்த வேண்டும் என பிரதமர் நரேந்திர மோடிக்கு கடிதம் எழுதி இருந்தார்.

Sushant Singh case: Subramanian Swami sensational information as to contact with drug dealer

இதனை அடுத்து சுஷாந்த் சிங் இறப்பினை சி.பி.ஐயின் வழக்காக எடுத்துக்கொண்டு தீவிரமாக விசாரணை நடத்தி வரும் நிலையில், பாஜகவின் மூத்த தலைவரான சுப்பிரமணியன் சுவாமி பரபரப்பான தகவல் ஒன்றினை வெளியிட்டுள்ளார்.

அதில், “சுஷாந்த் சிங் இறப்பதற்கு முன்பாக போதைப்பொருள் வியாபாரி ஒருவரை சந்தித்து உள்ளார் என அவர் கூறியுள்ளார்.

சுப்பிரமணியன் சுவாமி தனது ட்விட்டர் பக்கத்தில், “சுஷாந்த் சிங் இறப்பதற்கு முன்பு துபாயைச் சேர்ந்த போதைப்பொருள் வியாபாரியான அயாஷ் கான், சுஷாந்த் சிங்கை சந்தித்துள்ளது ஏன் என்றும் அந்த ட்வீட்டில் கேள்வி எழுப்பியுள்ளார்.

“சுனந்தா புஷ்கர் உடல் எய்ம்ஸ் மருத்துவமனை டாக்டர்கள் பிரேத பரிசோதனை செய்யப்பட்டபோது அவரது வயிற்றில் என்ன இருந்தது என்பதற்கான உண்மையான ஆதாரம் வெளியானது. ஆனால் அதே போன்று ஸ்ரீதேவி மற்றும் சுஷாந்த் சிங் இன் பரிசோதனை முடிவுகள் ஏன் வெளியாகவில்லை?”

மேலும் “ரியாத் சக்கரவர்த்தி மகேஷ் பட் உடனான உரையாடலின் ஆதாரங்களை அளித்து, சிபிஐ அவரை கைது செய்து விசாரணை நடத்த வேண்டும்” என அவர் குறிப்பிட்டுள்ளார்.

முன்னதாக சுஷாந்த் சிங்கின் ரூம் மேட் ஆன சித்தார்த் பிதானி, அவரது சமையல்காரர் ஆன நீரஜ் சிங் மற்றும் வீட்டு உதவியாளரான தீபேஷ் சாவந்த் ஆகியோர்களும் தற்போது சிபிஐ விசாரணை குழுவில் விசாரித்து வருகின்றனர்.

Previous articleபோலி போலீஸ் நடத்திய அரசு வேலை நாடகம்:! கோடிக்கணக்கில் பணம் கொள்ளை! பணத்தை பறிகொடுத்துவிட்டு தவிக்கும் பிஇ பட்டதாரிகள்!
Next articleஎன்னது பாண்டியன் ஸ்டோர்ஸ் சித்ராவிற்கு நிச்சயதார்த்தமா?