ஆப்ரிக்காவில் முடிவுக்கு வந்த வைரஸ்?

0
100
ஆப்ரிக்க நாடுகளில் நைஜீரியாவில் மட்டும் போலியோ நோய் கண்டறியப்பட்டு வந்தது. அங்கு மருத்துவத்துறையினருடன் இணைந்து உலக சுகாதார அமைப்பு மற்றும் உள்நாட்டு அரசு, தன்னார்வளர்கள் என பலத்தரப்பட்ட துறையினர் மேற்கொண்ட நடவடிக்கைகளால் தற்போது போலியோ கட்டுப்படுத்தப்பட்டுள்ளது. ஆப்ரிக்காவில் போலியோ கட்டுப்படுத்தப்பட்டு விட்டதாகவும், போலியோ இல்லாத பகுதியாக ஆப்ரிக்கா மாறிவிட்டதாகவும் உலக சுகாதார அமைப்பு இன்று அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.
கடந்த சில ஆண்டுகளாக அங்கு யாருக்கும் போலியோ பரவவில்லை என்பதால் ஆப்ரிக்காவில் போலியோ முடிவுக்கு வந்துவிட்டது என்ற இந்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியிடப்படுவதாக உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது. உலகிலேயே தற்போது பாகிஸ்தான் மற்றும் ஆப்கானிஸ்தான் ஆகிய இரு நாடுகளில் மட்டும்தான் போலியோ நோய் பரவல் உள்ளதாக உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது.
Previous article19 ஆயிரம் விமான ஊழியர்களை பணி நீக்கம் செய்யும் அபாயம்
Next articleதடுப்பூசி குறித்து முதல்கட்ட மனிதர்களுக்கு செலுத்தும் பரிசோதனை