அனைத்து வீரர்களுக்கும் ஊக்கமருந்து சோதனையா?

0
67
உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் 200 க்கும் மேற்பட்ட நாடுகளில் பரவி பெரிய ஆபத்தை ஏற்படுத்தி வருகிறது. இந்த வைரஸால் உலக நாடுகள் அனைத்தும் இயல்பு நிலைக்கு திரும்ப முடியாமல் தவித்து வருகின்றன. மேலும் விளையாட்டு  துறையிலும் பாதிப்பை ஏற்படுத்தி உள்ளது. தற்போது தான் ரசிகர்கள் இன்றி போட்டிகள் நடத்தப்பட்டு வருகின்றன. அந்த இந்த வருடம் ஐ.பி.எல். தொடர் ஐக்கிய அரபு அமீரகத்தில்  நடைபெற உள்ளது. அனைத்து அணி வீரர்களும் அமீரகத்திற்கு சென்று விட்டனர். இதையொட்டி தேசிய ஊக்கமருந்து தடுப்பு முகமை அதிகாரிகள், ஊழியர்கள் 9 பேர் அமீரகம் செல்ல உள்ளனர்.
அவசியம் எனில், அமீரகத்தின் தேசிய ஊக்கமருந்து தடுப்பு முகமையின் உதவியையும் பெற்றுக் கொள்வார்கள். அவர்கள் போட்டி இல்லாத காலங்களிலும், ஐ.பி.எல். போட்டியின் போதும் வீரர்களிடம் சிறுநீர் மாதிரியையும், தேவைப்பட்டால் ரத்த மாதிரியையும் சேகரித்து பரிசோதனை செய்வார்கள். குறைந்தது 50 வீரர்களிடம் ஊக்கமருந்து சோதனை நடத்த திட்டமிட்டு உள்ளதாக ஊக்கமருந்து தடுப்பு வட்டாரங்கள் தெரிவித்தன.