கடந்த 2010ஆம் ஆண்டு 100 கோடி ரூபாய் செலவில் சர்க்கரை ஆலை துவங்கப்பட்ட செயலில் இருந்தது.கரும்பு ஆலைகளில் கழிவுகளை கொண்டு மின் உற்பத்தி செய்ய முடிவு செய்யப்பட்டது. கழிவுகளின் மூலம் 110 மெகாவாட் மின் உற்பத்தி துணை மின் நிலையத்தில் இருந்து உருவாக்கப்பட்ட வந்தது.
மதுரை மாவட்டம் அலங்காநல்லூர் தேசிய கூட்டுறவு சர்க்கரை ஆலையின் அரவை செய்யும் கரும்பு கழிவிலிருந்து மின் உற்பத்தி செய்ய தொடங்கப்பட்டு, கரும்பை கரும்பு அரவை இல்லாததால் தற்போது நிறுத்தப்பட்டுள்ளன. இதனை ஒரு வடநாட்டு நிறுவனம் ஒப்பந்தம் போடப்பட்டு அந்நிறுவனம் 75 சதவீத கட்டணமாக பணிகளை முடித்துக் கொடுத்தது .அதன்பின் எந்த காரணத்தினால் இப்பணி தொடர்ந்து நடைபெறவில்லை. இதனால் முடிந்த மின்னுற்பத்தி நிலையத்தை கட்டுமானப் பகுதிகள் தற்பொழுது ஒன்றுக்குள் ஒன்றாக பழுதடைந்து வருவதாக கூறியுள்ளனர்.இதனை மறுசீரமைப்பு செய்ய மேலும் பல கோடி செலவாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
ஏற்கனவே ரூபாய் 100 கோடி ரூபாய் செலவில் இருந்து மின் உற்பத்தி தொடங்கி கூடிய நிலையில் ,தற்போது மேலும் பல கோடி செலவாகும் என்பதால் அதிகாரிகள் திணறி வருகின்றனர் .இது ஒருபுறமிருக்க மற்றொருபுறம் கரும்பு உற்பத்தி வெகுவாக இல்லாததால் மின் உற்பத்தி தடையாக இருப்பதாக கூறியுள்ளனர் .கடந்த ஆண்டைப் பொறுத்தவரை கரும்பு பதிவு இல்லாத காரணத்தால் அரவை நிறுத்தப்பட்டது. மேலும் கரும்பு அரவை செய்த விவசாயிகளுக்கு நிலுவை பணமும், ஆலை பணியாளர்களுக்கு சம்பள பாக்கியும் பல கோடி வரை உள்ளதால் இந்த ஆண்டு அரவை துவங்க தேவையான கரும்பு பதிவிற்கு அதிகாரிகள் விவசாயிகளின் வீடு தேடி சென்று வலியுறுத்தி வருகின்றனர்.
தென் மாவட்ட விவசாய மக்களின் முக்கிய தொழில் மையமாக விளங்கிய அலங்காநல்லூர் தேசிய கூட்டுறவு சர்க்கரை ஆலை இன்று தமிழக அரசின் பராமரிப்பின்றி அழிவை நோக்கி சென்று இருக்கிறது. விவசாயிகளுக்கு நிலுவை தொகையும், தொழிலாளர்களுக்கு சம்பள பாக்கியும் அரசு ஏற்றுக்கொண்டு ஆலையை மீண்டும் செயல்பாட்டிற்கு கொண்டு வர கூடுதல் நிதியை ஒதுக்கீடு செய்ய வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்தனர் .அதேபோல் ஆலையில் துருப்பிடித்து காட்சியளிக்கும் மின்துறை நிலைய கட்டுமான பணிகளை முழுமையாக பயன்பாட்டிற்குக் கொண்டு வரவேண்டும் என கூறியுள்ளனர்.