மீண்டும் ஜம்மு காஷ்மீர் எல்லை பதற்றம் : ட்ரோன் மூலமாக தொடர்ந்து கண்காணிப்பில் பாகிஸ்தான் ராணுவம்

0
75

இந்திய எல்லைப் பகுதியில் அமைந்துள்ள ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் ஒட்டியுள்ள பகுதிகளில் பாகிஸ்தான் ட்ரோன் மூலமாக போதைப்பொருட்களை இந்தியாவுக்கு கடத்தி வருவதாக எல்லை பாதுகாப்பு படையினர் கூறியுள்ளனர். இந்தியா பாகிஸ்தான் இடையே பல ஆண்டுகளாக எல்லைப் பிரச்சனை நடந்து வரும் நிலையில் இரு நாடு பகை நாடாக மாறி இருக்கின்றனர்.

இது ஒரு புறமிருக்க மற்றொரு புறத்தில் லடாக் பகுதியில் சீன ராணுவம் ஆக்கிரமிப்பு செய்ய முயன்று வருகின்றனர்.இவ்விரு நாடுகளின் தாக்குதலை இந்தியா சமாளித்து வருகின்றனது.

 

இதனை சமாளிக்க இந்திய ராணுவம் பலப்படுத்த தொடங்கியுள்ளது.அதன் ஒரு அடிப்படையில் சுமார் 58,000 கோடி செலவில் ரஃபேல்போர் விமானம் ரஷ்யாவிடமிருந்து வரவழைக்கப்பட்டது.அதேசமயம் எஸ்-400 என்ற ஏவுகணையை வாங்க இந்தியா திட்டமிட்டுள்ளது. பாகிஸ்தான் சீனா தொடர்ந்து இந்தியாவிடம் எல்லை பிரச்சனையை ஈடுபடுத்தி வருவதாக பாதுகாப்பு நடவடிக்கையாக ராணுவத்தை பலப்படுத்த இதனை பிரான்ஸிடமிருந்து பெறுவதாக கூறியுள்ளனர்.

ஜம்மு காஷ்மீர் பகுதிகளில் பாகிஸ்தான் போதை பொருட்களை கடத்த முயன்றதாக தகவல் தெரிவிக்கின்றது .அதேபோல வெடி பொருட்கள் உள்ளிட்டவை கடத்தி வருவதாக பிஎஸ்ஃப் தகவல் தெரிவிக்கின்றது.

ஆர்.எஸ் புறா மற்றும் சாம்பார் துறைகளில்ராணுவ தளங்களை தடுக்க பாகிஸ்தான் ஆயத்தம் ஆவதாக பிஎஸ்வ் எச்சரித்துள்ளது. பாகிஸ்தான் டோன் மூலம் தொடர்ந்து கண்காணித்த எல்லையை கைப்பற்ற தொடர்ந்து முயற்சித்து வருவதாகவும் ,அது ஒருபோதும் நடக்க விடமாட்டோம் என்று பிஎஸ்ஃப் தலைமை அதிகாரி கூறியுள்ளார். இதனைத் தொடர்ந்து 5 தீவிரவாதிகள் போதைப் பொருட்களுடன் ஊடுருவ முயன்ற போது பிஎஸ்வ் ராணுவத்தினரிடம் சிக்கிக்கொண்டனர். அவர்கள் தாக்குதல் நடத்தியதில் இந்திய வீரர்கள் காயம் அடைந்ததை அடுத்து இந்திய வீரர்கள் அவர்கள் 5 பேரையும் சுட்டுக் கொன்றனர். தற்பொழுது பஞ்சாப் பகுதியில் தொடர்ந்து ட்ரோன் மூலமாக பாகிஸ்தான் இந்தியாவை கண்காணித்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளன.

author avatar
Parthipan K