பல எதிர்ப்புகளையும் மீறி வெளியான நீட் நுழைவுத் தேர்வுக்கான ஹால் டிக்கெட்

0
177

நாடு முழுவதும் கொரோனா பரவ நாளுக்கு நாள் அதிகரித்து வருவதால் மருத்துவ படிப்புக்கான நீட் தேர்வு மற்றும் பொறியியல் படிப்பிற்கான ஜேஇஇ போன்றவற்றை இன்னும் நடத்தப்படாமல் உள்ளனர்.

இந்நிலையில் நீட் தேர்வு செப்டம்பர் 13-ஆம் தேதியும் ஜே இஇ தேர்வு செப்டம்பர் 1ஆம் தேதியும் நடைபெறும் என தேசிய தேர்வு முகமை அறிவித்துள்ளது .ஆனால் நாட்டில் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருவதால் நுழைவு தேர்வுகளை நடத்துவது ஆபத்து என்றும் நுழைவு தேர்வுகளை ஒத்திவைக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் ,அரசியல் கட்சி தலைவர்கள் உள்ளிட்டோர் தரப்பில் கோரிக்கை விடுத்து வந்தனர்.

இந்நிலையில் தேசிய தேர்வு முகமை திட்டமிட்டபடி நுழைவுத் தேர்வுகள் நடைபெறும் என கூறியுள்ளது .நீட் மற்றும் ஜேஇஇ தேர்வுக்கான மையங்கள் அதிகரித்துள்ளதாகவும், பாதுகாப்பு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது.

செப்டம்பர் 13 ஆம் தேதி நீட் நுழைவுத் தேர்வு நடக்க இருப்பதால் நுழைவுத் தேர்வுக்கான ஹால் டிக்கெட் இன்று வெளியானது.

Previous articleதொடர்ந்து சரிவை சந்தித்தது தங்கம்! இன்றைய தங்கம் மற்றும் வெள்ளி விலை நிலவரம்!
Next articleகல்லூரி மாணவர்களுக்கு மகிழ்ச்சியான செய்தி:! அரியர் எக்ஸாம்(arrear exams)அனைத்தும் ரத்து!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here