கல்லூரி மாணவர்களுக்கு மகிழ்ச்சியான செய்தி:! அரியர் எக்ஸாம்(arrear exams)அனைத்தும் ரத்து!

0
74

கல்லூரி மாணவர்களுக்கு மகிழ்ச்சியான செய்தி:! அரியர் எக்ஸாம்(arrear exams)அனைத்தும் ரத்து!

 

கொரோனா பரவல் காரணமாக பள்ளி பொதுத் தேர்வுகள் அனைத்தும் ரத்து செய்யப்பட்டு அனைவரும் தேர்ச்சி என்று பள்ளி கல்வி துறையால் அறிவிக்கப்பட்டது.மேலும் கல்லூரி மாணவர்களுக்கு இறுதி ஆண்டை தவிர்த்து முதலாமாண்டு, இரண்டாமாண்டு,மூன்றாம் ஆண்டு, மாணவர்களுக்கும்,அனைத்து தேர்வுகளும் ரத்து செய்யப்பட்டு தேர்ச்சி என்று உயர் கல்வித் துறையால் அறிவிக்கப்பட்டது.

இந்நிலையில் இறுதியாண்டு தேர்வுகளை ரத்து செய்ய மாணவர்கள் சார்பில் பல்வேறு வழக்குகள் தொடரப்பட்டு வருகின்றன.ஆனால் யுஜிசி அமைப்பானது,கல்லூரி இறுதியாண்டு செமஸ்டர்
தேர்வை நடத்தியே ஆக வேண்டும் என்று பிடிவாதமாக உள்ளது.

இந்நிலையில் தற்போது மாணவர்களின் நலன்கருதி, மாணவர்களின் கோரிக்கையை ஏற்று தமிழக அரசால் அமைக்கப்பட்ட உயர்மட்டக் குழுவின் பரிந்துரையின் அடிப்படையில் இறுதி செமஸ்டர் தேர்வுகளை தவிர்த்து,அரியர் பேப்பரை எழுதுவதற்கு கட்டணம் செலுத்தி காத்திருக்கும் மாணாக்கர்களுக்கு,UGC மற்றும் AICTE ஆகியவற்றின் வழிகாட்டுதலின்படி தேர்வு எழுதுவதிலிருந்து விலக்கு அளித்து மதிப்பெண்கள் வழங்கப்படும் என்று தமிழ்நாடு அரசு தெரிவித்துள்ளது.

 

author avatar
Pavithra