அமெரிக்காவில் மீண்டும் இப்படி ஒரு பிரச்சினையா?

0
104

அமெரிக்காவின் விஸ்கோன்சின் மாநிலத்தில் காவல்துறையால் சுடப்பட்ட கறுப்பின ஆடவர் முடமாகிவிட்டதாகவும் உயிருக்குப் போராடிக்கொண்டிருப்பதாகவும் அவருடைய குடும்பத்தாரும் வழக்கறிஞர்களும் தெரிவித்துள்ளனர். அதன் தொடர்பில் 3வது நாளாக கெனோஷா (Kenosha) நகரின் லேக்ஃப்ரொன்ட் டவுனில் (Lakefront Town) கலவரம் தொடர்ந்ததால், அம்மாநில ஆளுநர் நெருக்கடிநிலையை அறிவித்தார். நகரில் மீண்டும் அமைதியை நிலைநாட்டத் தேசியக் காவல்படையை இறக்கப்போவதாக அவர் கூறினார்.

இதற்கிடையே, பொதுமக்கள் நிதானமாக இருக்குமாறு பிலேக் (Blake) எனப்படும் அந்த 29 வயதுக் கறுப்பின ஆடவரின் தாய் கேட்டுக்கொண்டார். 6 பிள்ளைகளுக்குத் தந்தையான பிலேக்கின் பின்புறம் காவல்துறை அதிகாரிகள் 7 முறை துப்பாக்கியால் சுட்டனர். அவர் காவல் அதிகாரிகளை விட்டு நடந்து சென்று, தமது வாகனத்தின் கதவைத் திறக்கும்போது அந்தச் சம்பவம் நடந்தது.

Previous article டுடே பங்கு சந்தை நிலவரம்!!
Next articleஇந்தியாவிற்கு எதிராக திரும்பும் துருக்கி