ஆஸ்திரேலியாவில் நேரடியாக ஒளிபரப்பப்பட்ட வினோதமான நிகழ்ச்சி

0
125

ஆஸ்திரேலியாவின் பூங்கா ஒன்று இரவில் நேரடியாக ஒளிபரப்பும் பெங்குவின் அணிவகுப்புக்கு மக்களிடமிருந்து அமோக வரவேற்புக் கிடைத்துள்ளது. விக்டோரியா மாநிலத்தின் மெல்பர்ன் நகர் அருகே உள்ள ஃபிலிப் தீவில் அந்த அழகிய பறவைகள் கடலிலிருந்து தங்கள் வசிப்பிடத்திற்குத் தத்தித் தவழும் காட்சிகளை ஆயிரக்கணக்கானோர் கண்டு மகிழ்ந்தனர். அது ஒரு முக்கியமான சுற்றுலாத் தலமாக இருந்தது. ஆனால், அங்கு கிருமித்தொற்றுச் சம்பவங்கள் அதிகரித்ததால், மீண்டும் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது.

அதனால், அந்தத் தீவின் பாதுகாக்கப்படும் பூங்கா Facebook, YouTube ஆகிய தளங்களில் “Live Penguin TV” என்ற பெயரில் பெங்குவின் அணிவகுப்பை நேரடியாக ஒளிபரப்பியது. அது ஒளிபரப்பான முதல் இரவில் மட்டும் சுமார் 800,000 பேர் அதைப் பார்த்ததாகப் பூங்கா கூறியது. சுமார் 1 மணி நேரம் நீடிக்கும் அந்த ஒளிபரப்புகள், கிருமித்தொற்று தொடர்பான கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்ட பின்னரும் தொடரும் எனப் பூங்கா குறிப்பிட்டது.

 

Previous articleஅமெரிக்காவில் மூன்றாவது நாளாக தொடரும் வன்முறை
Next articleபுளிய மரத்தில் இருந்து வந்த குழந்தையின் அழுகுரல் அதிர்ந்து போன மக்கள்!