கரீபியன் லீக் : எளிதாக வெற்றி பெற்ற செயின்ட் லூசியா அணி

0
113

உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் 200க்கும் மேற்பட்ட நாடுகளில் பரவி மனித இனத்துக்கே பெரிய சோகத்தை ஏற்படுத்தி வருகிறது. மேலும் இந்த வைரஸால் சேவைகள் அனைத்தும் முடக்கத்தில் உள்ளன அந்த வகையில் அனைத்து வித போட்டிகளுக்கும் பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது. கடந்த மூன்று மாதங்களாக எந்த வித போட்டியும் நடக்காத நிலையில் இங்கிலாந்தில் மட்டும் ரசிகர்கள் யாரும் இன்றி போட்டிகள் நடத்தப்பட்டு வருகின்றன.  ஏற்கனவே இங்கிலாந்து – வெஸ்ட் இண்டிஸ் அணி தொடர் முடிந்த நிலையில் தற்போது இங்கிலாந்து – பாகிஸ்தான் இடையான மூன்று டெஸ்ட் போட்டிகள் மற்றும் மூன்று 20 ஓவர் போட்டிகள் கொண்ட தொடர் நடந்து வருகிறது.

அந்த வகையில் மேற்கு இந்திய தீவு அணியில் நடைபெறும் கரீபியன் லீக் 20 ஓவர் போட்டி நடந்து வருகிறது. நேற்று நடந்த ஆட்டத்தில் செயின்ட் லூசியா அணியும், செயின்ட் கிட்ஸ் அணியும் மோதின. டாஸ் வென்ற செயின்ட் லூசியா அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. முதலில் பேட்டிங் செய்த செயின்ட் கிட்ஸ் அணி 9 விக்கெட் இழப்புக்கு  110 ரன்கள் மட்டுமே எடுத்தது. அந்த அணியில் அதிகபட்சமாக பென் டங் 33 ரன்கள் அடித்தார். பின்னர் களமிறங்கிய செயின்ட் லூசியா அணி 14.4 ஓவரில் 111 ரன்கள் எடுத்து 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. அந்த அணியில் அதிகபட்சமாக நஜபுல்ல ஜார்டன் 33 ரன்கள் எடுத்தார்.

Previous article“அரியர் மாணவர்களின் அரசனே”:! தமிழக முதல்வருக்கு பிளக்ஸ் வைத்து கொண்டாடிய அரியர் மாணவர்கள்!!
Next articleபணியின்போது இறந்த இரண்டு காவலர் குடும்பத்திற்கு 26.25 லட்சம் நிதியுதவி அளித்த சக போலீஸ் அதிகாரிகள்!