இங்கிலாந்து – பாகிஸ்தான் முதல் 20 ஓவர் போட்டி இன்று ஆரம்பம்

0
143

உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் 200க்கும் மேற்பட்ட நாடுகளில் பரவி மனித இனத்துக்கே பெரிய சோகத்தை ஏற்படுத்தி வருகிறது. மேலும் இந்த வைரஸால் சேவைகள் அனைத்தும் முடக்கத்தில் உள்ளன அந்த வகையில் அனைத்து வித போட்டிகளுக்கும் பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது. கடந்த மூன்று மாதங்களாக எந்த வித போட்டியும் நடக்காத நிலையில் இங்கிலாந்தில் மட்டும் ரசிகர்கள் யாரும் இன்றி போட்டிகள் நடத்தப்பட்டு வருகின்றன.

ஏற்கனவே இங்கிலாந்து – வெஸ்ட் இண்டிஸ் அணி தொடர் முடிந்த நிலையில் தற்போது இங்கிலாந்து – பாகிஸ்தான் இடையான மூன்று டெஸ்ட் போட்டிகள் மற்றும் மூன்று 20 ஓவர் போட்டிகள் கொண்ட தொடர் நடந்து வருகிறது. இதில் மூன்று டெஸ்ட் போட்டிகள் நடந்து முடிந்த நிலையில் தொடரை 1 – 0 என இங்கிலாந்து கைப்பற்றியது. இதனை அடுத்து இன்று இரு அணிகளுக்கும் இடையேயான முதல் 20 ஓவர் போட்டி தொடங்குகிறது.

Previous articleகல்லூரி இறுதியாண்டு தேர்வை ரத்துசெய்வது குறித்த வழக்கு உச்சநீதிமன்றத்தில் இன்று விசாரணை!
Next articleஎனக்கு தனிப்பட்ட சாதனைகள் முக்கியமில்லை