தொடக்க வீரரான அஜிங்யா ரஹானே நிலைமை என்ன?

0
109

இந்தியாவில் தற்போது கொரோனா வைரஸ் அதிகரித்து வருவதால் இந்த வருடம் ஐ.பி.எல் தொடரை இங்கு நடத்த முடியாது அதனால் ஐக்கிய அரபு அமீரகத்திற்கு மாற்றப்பட்டது. இந்த முறை வீரர்களும் வெவ்வேறு அணியில் மாறியுள்ளனர். அந்த வகையில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்காக ஆடிய 32 வயதான அஜிங்யா ரஹானே, இந்த சீசனில் டெல்லி கேப்பிட்டல்ஸ் அணியுடன் இணைந்துள்ளார். ராஜஸ்தான் அணியில் ரஹானே தொடக்க வீரராக இறங்கினார். ஆனால் டெல்லி அணியில் தொடக்க வரிசை இடத்துக்கு ஷிகர் தவான், பிரித்வி ஷா உள்ளனர்.

அதற்கு அடுத்த வரிசையில் கேப்டன் ஸ்ரேயாஸ் அய்யர், ஹெட்மயர், ரிஷாப் பண்ட் ஆகியோர் ஆடுவார்கள். இதனால் ரஹானே எந்த வரிசையில் ஆடுவார் என்ற கேள்வி எழுந்துள்ளது. இதுகுறித்து ரஹானே கூறும்போது எந்த பேட்டிங் வரிசையில் விளையாடுவேன் என்பது தெரியாது. எங்களது அணியின் பயிற்சிகளை எல்லாம் முடித்த பிறகே அது பற்றி விவாதிப்போம் மேலும் அணி நிர்வாகம் என்னை எந்த வரிசையில் இறக்கினாலும் 100 சதவீதம் பங்களிப்பை அளிக்க தயாராக இருக்கிறேன் என்று கூறினார்.

 

 

Previous articleஅடடா! லோகேஷ் கனகராஜிடம் இளைய தளபதி காமிச்ச ரியாக்சன்! ஷாக்கான படக்குழுவினர்
Next articleவிருதுக்கு தேர்வு செய்யப்பட்ட வீரருக்கு கொரோனாவா?