அமெரிக்காவில் வீசிவரும் லோரோ  சூறாவளி நிலவரம்?

0
113

அமெரிக்காவின் லூயிஸியானா மாநிலத்தில் தற்போது வீசிவரும் லோரோ  சூறாவளியால் 4 பேர் இறந்தனர். வீடுகள் மீது மரங்கள் விழுந்ததால் அவர்கள் மாண்டதாக மாநில ஆளுநர் ஜான் பெல் எட்வார்ட்ஸ்  தெரிவித்தார். நேற்று கரையைக் கடந்த லோரோ  சூறாவளியால் பலத்தக் காற்றும், பல மணி நேர கனத்த மழையும் பெய்தது. தற்போது சூறாவளியின் வேகம் சற்று குறைந்துள்ளது. தேடல் மீட்புப்பணிகள் முடுக்கிவிடப்பட்டுள்ளதாக மாநில ஆளுநர் தெரிவித்தார். வீடுகளை இழந்தவர்களுக்கு மாற்று வசிப்பிடங்களை வழங்கும் முயற்சியிலும் அதிகாரிகள் ஈடுபட்டுள்ளனர்.

Previous articleஉலகிற்கு முதலில் அறிவித்தது சீனாதான்?
Next articleஇன்றைய பங்கு சந்தை நிலவரம்!!