இங்கிலாந்து – பாகிஸ்தான் இடையே நடைபெறுவது முத்தரப்பு தொடரா?

0
109

உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் 200க்கும் மேற்பட்ட நாடுகளில் பரவி மனித இனத்துக்கே பெரிய சோகத்தை ஏற்படுத்தி வருகிறது. மேலும் இந்த வைரஸால் சேவைகள் அனைத்தும் முடக்கத்தில் உள்ளன அந்த வகையில் அனைத்து வித போட்டிகளுக்கும் பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது. கடந்த மூன்று மாதங்களாக எந்த வித போட்டியும் நடக்காத நிலையில் இங்கிலாந்தில் மட்டும் ரசிகர்கள் யாரும் இன்றி போட்டிகள் நடத்தப்பட்டு வருகின்றன.  ஏற்கனவே இங்கிலாந்து – வெஸ்ட் இண்டிஸ் அணி தொடர் முடிந்த நிலையில் தற்போது இங்கிலாந்து – பாகிஸ்தான் இடையான மூன்று டெஸ்ட் போட்டிகள் மற்றும் மூன்று 20 ஓவர் போட்டிகள் கொண்ட தொடர் நடந்து வருகிறது. இதில் மூன்று டெஸ்ட் போட்டிகள் நடந்து முடிந்த நிலையில் தொடரை 1 – 0 என இங்கிலாந்து கைப்பற்றியது.

இதனை அடுத்து இன்று இரு அணிகளுக்கும் இடையேயான முதல் 20 ஓவர் போட்டி இந்திய நேரப்படி இரவு 10.30 க்கு ஓல்ட் டிராபோர்ட்டில் தொடங்கியது. டாஸ் வென்ற பாகிஸ்தான் அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. போட்டி ஆரம்பிக்கும் போதே வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்டது. இங்கிலாந்து அணி 16.1 ஓவருக்கு 131 ரன்கள் எடுத்த போது மழை குறுக்கிட்டது. பின்னர் நீண்ட நேரம் மழை பெய்ததால் ஆட்டம் கைவிடப்பட்டது. மேலும் ஏற்கனவே இரண்டு டெஸ்ட் போட்டியில் மழை குறுக்கிட்டதால் முடிவு தெரியாமல் போனது. இதனால் இந்த இரு அணிகளுக்கும் இடையில் மழையும் சேர்ந்து விட்டதால் இது ஒரு முத்தரப்பு தொடர் என ரசிகர்கள் கலாய்த்து வருகின்றனர்.

Previous article“சிறுதொழிலாளியாக இருந்து பல கோடிகளுக்கு முதலாளியான” வசந்தகுமார் வாழ்வில் உயர்ந்தது எப்படி? – Biopic
Next articleசட்டமன்ற தேர்தல் நடத்துவது குறித்த பொதுநல வழக்கு: உச்சநீதிமன்றத்தின் அதிர்ச்சி ரிப்போர்ட்!!