மறையும் வெயில் பட்டால் அழகு கூடுமா?

0
190

பகல் நேரங்களில் வெயிலில் சுற்றும் சிறுவர்களை கண்டிப்பதுண்டு என்றாலும் மாலை நேரம் மறையும் வெயில் பட்டால் மேனி பொன்னிறமாகும் என்று பெரியவர்கள் சொல்வதுண்டு.

மறையும் சூரியனின் காட்சி மிக அழகானது என்பது எல்லோரும் அறிவோம். இக்காட்சியைக் காண்பதற்கு கடற்கரையில் அல்லது குன்றுகளின் மேல் செல்வதுண்டு. மறையும் வெயில் உடலில் ஏற்கவேண்டும் என்றும் நாம் சூரியன் மறைவதை காணச் செல்லும்போது உத்தேசிக்கின்றோம்.

புராணமனிதன் இயற்கையின் நேரடியான அரவணைப்பில் வாழ்ந்து வந்தான். அவன் வாழ்க்கையின் எல்லா பகுதிகளும் இயற்கையை குறித்துள்ள பகுத்தறிவின் அடிப்படையில் அமைந்தன. அவனுடைய அன்றாட வாழ்க்கையில் இயற்கையுடன் நெருங்கிய ஆத்ம உறவு இருந்து வந்தது.

மறையும் வெயில், பனி, மழை, காற்று எல்லாம் புராண மக்களுக்கு நண்பர்களாக இருந்தனர். மறையும் வெயிலின் அரவணைப்பில் அவர்கள் ஒளிரும் மேனியை பெற்றிருந்தனர். இதன் பின்னால் உள்ள இயற்கை உண்மைகளை அவர்கள் அறிந்திருந்தனர்.

சூரிய ஒளி ஒரு சில சரும நோய்களைத் தடை செய்யும் சக்தி வாய்ந்தது என்று மருத்துவத்துறைப் வெளிப்படுத்தியுள்ளது. கிழக்கிலிருந்து சூரியன் மேற்கு நோக்கி செல்லும் போது உள்ள கதிர்களில் வைட்டமின் டி அதிகமாக அடங்கியுள்ளது.

மாலை நேரத்தில் மறையும் வெயிலினால் தேமல் போன்ற சில சரும நோய்களுக்கு நிவாரணம் மற்றும் வைட்டமின் டி-யும் கிடைப்பதனாலே இதை பொன்னிறம் தரும் வெயில் என்று சிறப்பித்து இருந்தனர்.

Previous articleகுடும்பத் தலைவிகளுக்கு பயன்தரும் சில எளிய வீட்டுக் குறிப்புகள்!!
Next articleஇந்த நீரை ஒரு மாதம் குடித்தால் உங்கள் உடலில் ஏற்படும் அதிசயங்களை தெரிந்து கொள்ளுங்கள்!