குடும்பத் தலைவிகளுக்கு பயன்தரும் சில எளிய வீட்டுக் குறிப்புகள்!!

0
76

*துருப்பிடித்த ஆணிகளை எளிதாக கழற்ற ஆணியின் மீது சிறிது வினிகரை ஊற்றி சில நிமிடங்கள் ஊற வைத்து பின் கழற்றினால் எளிதில் வரும்.

*கண்ணாடி பாத்திரங்களை கழுவும்போது முதலில் தண்ணீரில் சிறிது துணிகளுக்குப் போடும் நிலத்தை கலந்து கழுவி பின்னர் வெந்நீரில் கழுவினால் பாத்திரங்கள் பளபளக்கும்.

*துருப்பிடித்த அரிவாள்மனை, கத்தி இவற்றின் மீது ஒரு வெங்காயத்தை நறுக்கித் தேய்த்தால் துரு போய் பளிச்சென்று ஆகிவிடும்.

*மெல்லிய டிஷ்யூ அல்லது செய்தித்தாள்களால் துடைத்தால் கண்ணாடி ஜன்னல்கள் பளபளக்கும்.

*குளிர்சாதனப் பெட்டியில் சில கரித்துண்டுகளை போட்டு வைத்தால் துர்நாற்றம் வராது.

*காலிப்ளவர் சமைக்கும் போது ஒரு துளி பால் சேர்த்தால் பூ போன்ற வெள்ளை நிறம் மாறாமல் இருக்கும். பச்சை வாடையும் வராது.

*காய்ந்த எலுமிச்சை தோலை அலமாரியில் போட்டு வைத்தால் பூச்சிகள் வராது.

*காய்ந்த மிளகாயை வறுக்கும்போது சிறிது உப்பு போட்டு வறுத்தால் நெடி வராது.

*குலாப்ஜாமுன் பாகில் ஒரு ஸ்பூன் தேன் விட்டு இறக்கினால், பாகு உறையாமலும் கெட்டுப் போகாமலும் இருப்பதுடன் சுவையாகவும் இருக்கும்.

*பாகற்காயை சமைப்பதற்கு முன்னால் அரை மணி நேரம் உப்பு கலந்த நீரில் ஊற வைத்தால் அதன் கசப்பு குறையும்.

author avatar
Parthipan K