சிறுவனுக்கு கொரியர் மூலம் வந்தது என்ன ? திறந்தவுடன் அதிர்ச்சியடைந்த தந்தை !! 

Photo of author

By Parthipan K

சிறுவனுக்கு கொரியர் மூலம் வந்தது என்ன ? திறந்தவுடன் அதிர்ச்சியடைந்த தந்தை !!

ஒன்பதாம் வகுப்பு படிக்கும் மாணவனுக்கு வந்த பார்சலை பார்த்து அதிர்ச்சி அடைந்த தந்தை உறைந்து நின்ற சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

பெங்களூரில் உள்ள சதாசிவ நகரை சேர்ந்த 45 வயது தொழிலதிபருக்கு மகனாக ஒன்பதாம் வகுப்பு படிக்கும் ஒரு மகன் உள்ளான். அந்தச் சிறுவனுக்கு சமீபத்தில் கொரியர் மூலம் பார்சல் ஒன்று வீட்டிற்கு வந்தது .சிறுவன் வீட்டில் விளையாடிக் கொண்டிருந்ததால் ,அந்தக் பார்சலை சிறுவனின் தந்தை வாங்கி திறந்து பார்த்தார்.

அப்போது கொரியரின் உள்ளே அடர்பழுப்பு நிறத்தில் ஏதோ பொடி போன்ற இருப்பதை கண்டார். அது என்ன பொடி என்பதை தெரிந்துகொள்ள புகைப்படமாக எடுத்து அவரது நண்பர்களுக்கு அனுப்பி விசாரித்தபொழுது ,அது கஞ்சா பொடி என்பது தெரியவந்தது.

இதனை கேட்டு அதிர்ச்சி அடைந்த சிறுவனின் தந்தை உடனடியாக அந்த பார்சலை எடுத்துக்கொண்டு அருகில் உள்ள காவல் நிலையத்திற்கு சென்று புகார் அளித்துள்ளார் .மேலும் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார் அந்த பார்சலை எங்கிருந்து வந்தது? யார் அனுப்பியது ?என்று பல தரப்பில் விசாரணை நடத்து வந்ததில், பார்சல் என்ஜி ரோட்டிலிருந்து தினேஷ்குமார் என்பவரால் அனுப்பப்பட்டது தெரியவந்தது.

இதனைத் தொடர்ந்து தினேஷ்குமார் கைது செய்யும் முயற்சியில் போலீசார் ஈடுபட்டனர் .மேலும், ஒன்பதாம் வகுப்பு படிக்கும் சிறுவனுக்கு கஞ்சா பார்சல் வந்ததால் ,அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.