சாம்பியன் பட்டம் வென்ற ஜோகோவிச்

சின்சினாட்டி ஓபன் சர்வதேச டென்னிஸ் போட்டி அமெரிக்காவின் நியூயார்க் நகரில் நடைபெற்றது. ஆண்கள் ஒற்றையர் பிரிவில் நடந்த இறுதி ஆட்டத்தில் உலகின் ‘நம்பர் ஒன்’ வீரரான செர்பியாவின் நோவக் ஜோகோவிச், கனடாவை சேர்ந்த மிலோஸ் ராவ்னிக்கை எதிர்கொண்டார். இதில் முதல் செட்டை 1-6 என ராவ்னிக் கைப்பற்றினார். அதன்பின் அதிரடியாக ஆடிய ஜோகோவிச் அடுத்த 2 செட்களையும் கைப்பற்றி அசத்தினார். இறுதியில், ஜோகோவிச் 1-6, 6-3, 6-4 என்ற செட் கணக்கில் ராவ்னிக்கை வீழ்த்தியதுடன், சாம்பியன் பட்டத்தையும் கைப்பற்றி அசத்தினார்.