கரீபியன் லீக் : மோசமான தோல்வியை சந்தித்த பார்படாஸ் அணி

0
211

உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் 200க்கும் மேற்பட்ட நாடுகளில் பரவி மனித இனத்துக்கே பெரிய சோகத்தை ஏற்படுத்தி வருகிறது. மேலும் இந்த வைரஸால் சேவைகள் அனைத்தும் முடக்கத்தில் உள்ளன அந்த வகையில் அனைத்து வித போட்டிகளுக்கும் பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது. கடந்த மூன்று மாதங்களாக எந்த வித போட்டியும் நடக்காத நிலையில் இங்கிலாந்தில் மட்டும் ரசிகர்கள் யாரும் இன்றி போட்டிகள் நடத்தப்பட்டு வருகின்றன.  ஏற்கனவே இங்கிலாந்து – வெஸ்ட் இண்டிஸ் அணி தொடர் முடிந்த நிலையில் தற்போது இங்கிலாந்து – பாகிஸ்தான் இடையான மூன்று டெஸ்ட் போட்டிகள் மற்றும் மூன்று 20 ஓவர் போட்டிகள் கொண்ட தொடர் நடந்து வருகிறது.

அந்த வகையில் மேற்கு இந்திய தீவு அணியில் நடைபெறும் கரீபியன் லீக் 20 ஓவர் போட்டி நடந்து வருகிறது. நேற்று நடந்த ஆட்டத்தில் செயின்ட் லூசியா அணியும், பார்படாஸ் அணியும் மோதின. டாஸ் வென்ற பார்படாஸ் அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. முதலில் பேட்டிங் செய்த செயின்ட் லூசியா அணி 92 ரன்களுக்கு அனைத்து விக்கெட்களையும் இழந்தது. அந்த அணியில் அதிகபட்சமாக நஜபுல்லா 22 ரன்கள் எடுத்தார். பின்னர் எளிதான இலக்கை நோக்கி களமிறங்கிய பார்படாஸ் அணி 20 ஓவர்களுக்கு 7 விக்கெட் இழந்து 89 ரன்கள் மட்டுமே எடுத்து மோசமான தோல்வியை தழுவியது. அந்த அணியில் அதிகபட்சமாக சார்லஸ் 39 ரன்கள் எடுத்தார்.

Previous articleஊரடங்கை மீறி கட்சி கூட்டம் நடத்தி பார்ட்டி வைத்த திமுக எம்.பி உட்பட 317 பேர் மீது காவல்துறை வழக்குப் பதிவு!!
Next articleகரீபியன் லீக் : நிகோலஸ் பூரனின் அதிரடி சதத்தால் வெற்றி பெற்ற அமேசான் வாரியர்ஸ் அணி

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here