உலகம் முழுவதும் 200 க்கும் மேற்பட்ட நாடுகளில் கொரோனா வைரஸ் பரவி மனித இனத்துக்கே பெரிய ஆபத்தை ஏற்படுத்தி வருகிறது. உலக நாடுகள் அனைத்தும் இயல்பு நிலைக்கு திரும்ப முடியாமல் தவித்து வருகின்றன. சீனாவில் ஹூபேய் மாகாணம் வுகான் நகரில் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் கொரோனா வைரஸ் கண்டுபிடிக்கப்பட்டது. இந்த வைரசுக்கு தடுப்பு மருந்து கண்டுபிடிக்கும் பணியின் இறுதி கட்டத்தை விஞ்ஞானிகள் எட்டியுள்ளனர். ஆனாலும் கொரோனாவின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே செல்கிறது. உலகம் முழுவதும் கொரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 8 லட்சத்து 34 ஆயிரத்தை கடந்துள்ளது.
தற்போதைய நிலவரப்படி, உலகம் முழுவதும் கொரோனா பாதித்தவர்கள் எண்ணிக்கை 2.53 -கோடியாக உயர்ந்துள்ளது. கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டவர்களில் இதுவரை 1 கோடியே 77 லட்சத்து 970 பேர் சிகிச்சைக்கு பின் குணமடைந்துள்ளனர். இந்த நிலையில் நோய்த்தொற்றுக்கான தடுப்பு மருந்து சந்தைக்கு வந்த பிறகு, அதை 2 முறை எடுத்துக்கொள்ள வேண்டிய தேவையிருக்கலாம் என்று கூறப்படுகிறது. ஆனால், அதில் சில பிரச்சனைகள் உள்ளதாக அமெரிக்காவின் வண்டர்பில்ட் பல்கலைக்கழகப் பேராசிரியர் CNN செய்தி நிறுவனத்திடம் தெரிவித்துள்ளார்.