இங்கிலாந்து – பாகிஸ்தான் கடைசி இருபது ஓவர் போட்டி வெல்லபோவது யார்?

0
189

உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் 200க்கும் மேற்பட்ட நாடுகளில் பரவி மனித இனத்துக்கே பெரிய சோகத்தை ஏற்படுத்தி வருகிறது. மேலும் இந்த வைரஸால் சேவைகள் அனைத்தும் முடக்கத்தில் உள்ளன அந்த வகையில் அனைத்து வித போட்டிகளுக்கும் பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது. கடந்த மூன்று மாதங்களாக எந்த வித போட்டியும் நடக்காத நிலையில் இங்கிலாந்தில் மட்டும் ரசிகர்கள் யாரும் இன்றி போட்டிகள் நடத்தப்பட்டு வருகின்றன.  ஏற்கனவே இங்கிலாந்து – வெஸ்ட் இண்டிஸ் அணி தொடர் முடிந்த நிலையில் தற்போது இங்கிலாந்து – பாகிஸ்தான் இடையான மூன்று டெஸ்ட் போட்டிகள் மற்றும் மூன்று 20 ஓவர் போட்டிகள் கொண்ட தொடர் நடந்து வருகிறது.

டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்து 1 – 0 என தொடரை கைப்பற்றியது. இதனை அடுத்து முதல் 20 ஓவர் போட்டி மழையால் ஆட்டம் தடைப்பட்டது. இரண்டாவது போட்டியில் இங்கிலாந்து கேப்டன் மோர்கன் அதிரடியால் அபார வெற்றி பெற்றது. இதனை அடுத்து இன்று மூன்றாவது இருபது ஓவர் இன்று இந்திய நேரப்படி இரவு 10.30 க்கு தொடங்குகிறது. இரு அணிகளும் வெல்ல தீவிர பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றனர்.

Previous articleகாங்கிரஸ் தலைவர்களுக்கு எதிராக கடும் அதிருப்தியில் குஷ்பு!! காங்கிரசில் இருந்து வெளியேறுகிறார்?
Next articleரசிகர்கள் இன்றி அரங்கேறிய அமெரிக்க ஓபன் டென்னிஸ்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here