அமெரிக்க ஓபன் டென்னிஸ் : இத்தனை ஆண்டுகளுக்கு பின்னர் வெற்றி பெற்ற முதல் இந்திய வீரர்

0
187
கிராண்ட்ஸ்லாம் என்ற உயரிய அந்தஸ்து பெற்ற அமெரிக்க ஓபன் டென்னிஸ் போட்டியில் முதல் சுற்று ஆட்டம் ஒன்றில் இந்திய வீரர் சுமித் நாகல் அமெரிக்காவின் பிரட்லி ஹெலனை ஆண்கள் ஒற்றையர் பிரிவில் எதிர்கொண்டார். விறுவிறுப்பாக நடந்த இப்போட்டியில் 6-1, 6-3, 3-6, 6-1 என்ற செட் கணக்கில் அமெரிக்க வீரரை வீழ்த்தி இந்தியாவின் சுமித் நாகல் வெற்றி பெற்றார். இந்த வெற்றியின் மூலம் அமெரிக்க ஓபன் டென்னிஸ் போட்டியின் 2-வது சுற்றுக்கு சுமித் முன்னேறினார். மேலும் அமெரிக்க ஓபன் டென்னிஸ் போட்டியில் ஒற்றையர் பிரிவில் 7 ஆண்டுகளுக்கு பிறகு வெற்றி பெற்ற முதல் இந்தியர் என்ற பெருமைக்கு சொந்தக்காரர்  இவர்தான்.
இதற்கு முன் 2013 ஆம் ஆண்டு இந்தியாவின் சோம்தேவ் அமெரிக்க ஓபன் டென்னிஸ் போட்டியின் ஒற்றையர் பிரிவில் முதல் சுற்றில் வெற்றி பெற்றார். அவரையடுத்து இத்தனை ஆண்டுகளில் வெறு எந்த ஒரு இந்திய வீரரும் அமெரிக்க ஓபனில் முதல் சுற்றில் வெற்றி பெறவில்லை என்ற நிலை இருந்து வந்தது. முதல் சுற்றில் பெற்ற வெற்றியை வெற்றியை தொடர்ந்து அமெரிக்க ஓபன் ஒற்றையர் பிரிவின் 2-வது சுற்றுக்கு முன்னேறியுள்ள சுமித் நாகல் நாளை நடைபெற உள்ள ஆட்டத்தில் டொமினிக் திய்ம்மை எதிர்கொள்கிறார்.
Previous articleமாணவர்களே தயாராக இருங்கள்!அதிரடி அறிவிப்பை வெளியிட்ட அமைச்சர்!
Next articleஉலகம் முழுவதும் இத்தனை கோடி பேர் குணமாகி உள்ளனரா?

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here