உக்ரேனில் நடந்த வினோத சம்பவம்

0
131

பலரின் வாயைப் பிளக்க வைத்த அந்தச் சம்பவம் உக்ரேன் தலைநகர் கீவ் நகரின் போரிஸ்பில் அனைத்துலக விமான நிலையத்தில் நடந்தது. சில சமயம், விமானம் தரை இறங்கிய பின், விமானக் கதவுகள் திறக்கச் சற்று நேரம் காத்திருக்க வேண்டியிருக்கும். ஆனால், உக்ரேனில்  காத்திருக்க மறுத்த ஒரு பெண் தானாகவே விமானத்தின் அவசரக் கதவுகளைத் திறந்து விமானத்தின் இறக்கையில் நடந்தார். மிகவும் புழுக்கமாக இருந்ததால் அவ்வாறு செய்ததாக கூறினார்.

அவர் அவ்வாறு செய்ததால், Ukraine International ஏர்லைன்ஸ் தனது அனைத்து விமானச் சேவைகளிலும் பயணம் செய்ய அவருக்குத் தடை விதித்திருக்கிறது. மேலும், அவருக்கு ஒரு பெரிய தொகை அபராதமாக விதிக்கப்படலாம் என்றும் அது குறிப்பிட்டது. சம்பவம் நடந்தபோது பெண் மதுபோதையில் இல்லை என்பதை மருத்துவர்கள் உறுதி செய்துவிட்டனர்.

Previous articleதமிழகத்தில் புதிதாக 5870 பேருக்கு கொரோனா; மேலும் 61 பேர் பலி: இன்றைய நிலவரம்!!
Next articleகல்லூரி இறுதிப் பருவத்தேர்வு வருகின்ற செப்டம்பர் 21-ஆம் தேதி தொடங்கும்:! பல்கலைக்கழகம் அறிவிப்பு!