கரீபியன் லீக் : 7 விக்கெட் வித்தியாசத்தில் வென்ற பார்படாஸ் அணி

0
190

உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் 200க்கும் மேற்பட்ட நாடுகளில் பரவி மனித இனத்துக்கே பெரிய சோகத்தை ஏற்படுத்தி வருகிறது. மேலும் இந்த வைரஸால் சேவைகள் அனைத்தும் முடக்கத்தில் உள்ளன அந்த வகையில் அனைத்து வித போட்டிகளுக்கும் பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது. கடந்த மூன்று மாதங்களாக எந்த வித போட்டியும் நடக்காத நிலையில் இங்கிலாந்தில் மட்டும் ரசிகர்கள் யாரும் இன்றி போட்டிகள் நடத்தப்பட்டு வருகின்றன.  ஏற்கனவே இங்கிலாந்து – வெஸ்ட் இண்டிஸ் அணி தொடர் முடிந்த நிலையில் தற்போது இங்கிலாந்து – பாகிஸ்தான் இடையான மூன்று டெஸ்ட் போட்டிகள் மற்றும் மூன்று 20 ஓவர் போட்டிகள் கொண்ட தொடர் நடந்து வருகிறது.

அந்த வகையில் மேற்கு இந்திய தீவு அணியில் நடைபெறும் கரீபியன் லீக் 20 ஓவர் போட்டி நடந்து வருகிறது. நேற்று நடந்த மற்றொரு ஆட்டத்தில் ஜமைக்கா அணியும், பார்படாஸ் அணியும் மோதின. டாஸ் வென்ற ஜமைக்கா அணி பேட்டிங்கை தேர்வு செய்தது. அந்த அணி 4 விக்கெட் இழப்புக்கு 161 ரன்கள் எடுத்தது. அந்த அணியில் அதிகபட்சமாக பிளாக் உட் 74 ரன்கள் குவித்தார். பின்னர் களமிறங்கிய பார்படாஸ் அணி 18.2 ஓவரில் 165 ரன்கள் எடுத்து 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. அந்த அணியில் அதிகபட்சமாக ஹோல்டர் 69 ரன்கள் குவித்தார்.

Previous articleகரீபியன் லீக் : பொல்லார்ட் அதிரடியால் வென்ற நைட் ரைடர்ஸ் அணி
Next articleமேலே எம்.சாண்ட் கீழே ஆற்று மணல்:! நூதன கொள்ளை!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here