இங்கிலாந்து நாட்டில் நடுரோட்டில் கத்திக்குத்து சம்பவமா?

0
171

இங்கிலாந்தில் உள்ள பர்மிங்ஹம் நகரில் கத்திக் குத்துச் சம்பந்தமான தொடர்பில் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். இந்த சம்பவத்தில் ஒருவர் இறந்துள்ளார் மேலும் ஏழு பேர் காயமடைந்துள்ளனர். கைது செய்யப்பட்ட சந்தேக நபருக்கு 27 வயது என்றும் அவர் இன்று அதிகாலை 4 மணியளவில் செல்லி ஓக்  பகுதியில் கைது செய்யப்பட்டார் என்றும் காவல்துறையினர் தெரிவித்தனர். கத்திக் குத்துச் சம்பவங்கள் சுமார் இரண்டு மணிநேரத்தில் நான்கு வெவ்வேறு இடங்களில் நடந்ததாகப் புலனாய்வு அதிகாரி கூறினார். இந்தத் தாக்குதல் சம்பவத்தில் பயங்கரவாத அமைப்புக்கோ குழுக்களுக்கோ தொடர்பில்லை என்று தெரிவிக்கப்பட்டது. இந்த கத்திக்குத்தில் இறந்தவருக்கு வயது 23. மருத்துவமனையில் உள்ள 7 பேரில் இருவர் கவலைக்கிடமான நிலையில் உள்ளதாகக் காவல்துறை அறிவித்துள்ளது.

 

 

Previous articleதனது ரசிகர்களுக்கு உற்சாகமான செய்தியை கூறிய பி.வி.சிந்து
Next articleதமிழகத்தில் கொரோனா பாதிப்பு 4.74 லட்சத்தை கடந்தது: இன்றைய நிலவரம்!!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here