உலகின் மிகப்பெரிய சரக்கு கப்பல் இந்த நாட்டிற்கு வந்ததா?

0
169

உலகின் மிகப்பெரிய சரக்கு கப்பலான ‘ஹெச்.எம்.எம்.டான்ஸ்க்’, துபாய் துறைமுகத்தின் சார்பில் அமைக்கப்பட்டுள்ள லண்டன் கேட்வே முனையத்தில் இருந்து இந்த துறைமுகத்திற்கு தற்போது வருகை புரிந்துள்ளது. தென்கொரிய நாட்டில் தயாரிக்கப்பட்ட இந்த கப்பல் பனாமா நாட்டில் பதிவு செய்யப்பட்டு அந்த நாட்டின் கொடி பறக்க விடப்பட்டுள்ளது. இந்த கப்பல் 1,312 அடி நீளமும், 200 அடி அகலமும் கொண்டதாகும். அதாவது 4 கால்பந்து மைதானங்களின் அளவுடைய கப்பல் இதுவாகும். இந்த ஆண்டு கட்டுமான பணிகள் நிறைவடைந்து கடந்த ஜூன் மாதம் 29-ந் தேதி தென்கொரியாவில் இருந்து இந்த கப்பல் தனது முதல் பயணத்தை தொடங்கியது. தற்போது

துபாயில் இருந்து சிங்கப்பூருக்கு செல்ல தயாராகி வருகிறது. வளைகுடா நாடுகளில் ஜெபல் அலி உள்பட ஒரு சில துறைமுகங்களே இதுபோன்ற பிரமாண்ட கப்பல்களை கையாள முடியும். துபாய் துறைமுகம் ஒரே நேரத்தில் இதுபோன்று 10 மெகா அளவுடைய கப்பல்களை கையாளும் திறன் கொண்டது. மேற்கண்ட தகவலை துபாய் துறைமுகத்தின் மேலாண்மை இயக்குனர் மற்றும் தலைமை செயல் அதிகாரி முகம்மது அல் முவல்லம் தெரிவித்தார்.

Previous articleபிரபல தமிழ் பட வில்லன் திடீர் மரணம்!
Next articleகள்ளக்குறிச்சியில் கொரோனா தடுப்பு விதிமீறல்களுக்கு அபராதம்: மாவட்ட ஆட்சியர் உத்தரவு!!