சர்ச்சையான சூழ்நிலையில் பாஜக நபருடன் இணைந்த நடிகர் சூர்யா!

0
193
Suriya Joins with BJP MP-News4 Tamil Online Tamil News
Suriya Joins with BJP MP-News4 Tamil Online Tamil News

சர்ச்சையான சூழ்நிலையில் பாஜக நபருடன் இணைந்த நடிகர் சூர்யா!

கடந்த சில நாட்களாக மீடியாவில் பரபரப்பாக பேசப்பட்டு வரும் சூர்யா நடித்து முடித்துள்ள ‘காப்பான்’ திரைப்படம் வரும் ஆகஸ்ட் 30-ஆம் தேதி வெளியாகவுள்ளது.  இந்நிலையில் அவர் தற்போது ‘சூரரைப் போற்று’ என்ற படத்தில் நடித்து வருகிறார். ‘இறுதிச்சுற்று’ இயக்குனர் சுதாகொங்காரா இந்த படத்தை இயக்கி வரும் நிலையில் இந்த படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

மேலும் படிக்க : சூர்யாவின் வீட்டுக்கு 100 கோடி பணம் எப்படி வந்தது? பாஜக நிர்வாகி கேள்வி

இப்படத்தின் பெரும்பாலான படப்பிடிப்பு நடந்து முடிந்துள்ள நிலையில் தற்போது பிரபல பாலிவுட் நடிகரும், தேசிய விருது பெற்றவரும், முன்னாள் எம்பியுமான பரேஷ் ராவல் என்பவர் இணைந்துள்ளார். இவர் இந்த படத்தில் ஏர்லைன்ஸ் உரிமையாளராக நடிக்க இருப்பதாக தெரிகிறது.

கடந்த 2014-ம் ஆண்டு நடந்த பாராளுமன்ற தேர்தலில் பாஜக வேட்பாளராக அகமதாபாத் கிழக்கு தொகுதியில் போட்டியிட்ட பரேஷ் ராவல் சுமார் 6 லட்சம் வாக்குகளுக்கும் அதிகமாக பெற்று வெற்றி பெற்றார் என்பது குறிப்பிடத்தக்கது.

பாலிவுட்டின் முன்னணி நடிகரான பரேஷ் ராவல் வில்லன், காமெடியன், குணசித்திர நடிகர் என பல வேடங்களில் நடித்தவர். மேலும் நடிப்பிற்காக அதிகமான விருதுகளை பெற்றவர். சிறந்த துணை நடிகருக்கான தேசிய விருது பெற்றவர். மத்திய அரசின் பத்மஸ்ரீ பட்டம் பெற்றவர். இவர் 100 க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார். பாரதிய ஜனதா கட்சியின் முக்கிய பிரமுகராக உள்ள இவர் தற்போது அலகாபாத் கிழக்கு தொகுதி எம்.பியாக உள்ளார்.

இந்நிலையில் பரேஷ் ராவல் முதன் முறையாக தமிழில் நடிக்கிறார். அதுவும் சூர்யா நடிக்கும் இந்த சூரறை போற்று படத்தில் அவர் வில்லனாக நடிக்கிறார். இந்தப் படத்தை இறுதி சுற்று படத்தை இயக்கிய சுதா கொங்கரா இயக்குகிறார். இதில் அபர்னா பாலமுரளி தான் ஹீரோயின். படம் தமிழ், இந்தியில் தயாராகிறது. பரேஷ் ராவல் நடிப்பது பற்றிய அதிகாரபூர்வ அறிவிப்பு ஓரிரு நாளில் வெளியாகும்.

மத்திய அரசின் புதிய கல்விக்கொள்கை குறித்து சூர்யா கூறிய கருத்துக்கள் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ள நிலையில் தற்போது அவர் பிஜேபியைச் சேர்ந்த நபருடன் இணைந்து நடிக்கவிருப்பது அனைவரையும் ஆச்சர்யப்படுத்தியுள்ளது. 

சூர்யா, அபர்ணா பாலமுரளி, ஜாக்கி ஷெராப், கருணாஸ், மோகன்பாபு உள்பட பலர் நடித்து வரும் இந்த படத்தை 2D எண்டர்டெயின்மெண்ட் நிறுவனம் தயாரித்து வருகிறது. ஜிவி பிரகாஷ் இசையில் நிகேத் பொம்மிரெட்டி ஒளிப்பதிவில் சதீஷ் சூர்யா படத்தொகுப்பில் இந்த படம் உருவாகி வருகிறது

அப்புறம் என்ன சீக்கிரம் இந்த பஞ்சாயத்தை பேசி தீர்த்துக்கொள்ள வேண்டியது தான்..!

மேலும் படிக்க : பாஜக தலைவர்களின் பேச்சுக்கு தக்க பதிலடி கொடுத்த நடிகர் சூர்யா!

மேலும் இது போன்ற தமிழ் செய்திகள்,மாவட்ட செய்திகள், மாநில செய்திகள், தேசிய செய்திகள், உலக செய்திகள், விளையாட்டு செய்திகள், அரசியல் செய்திகள், வணிக செய்திகள்,தொழில்நுட்ப செய்திகள்,பொழுதுபோக்கு செய்திகள்,சினிமா செய்திகள், ஆன்மீக செய்திகள், ஜோதிட செய்திகள் போன்ற நடுநிலையான செய்திகளை உடனுக்குடன் உண்மைத் தன்மையுடன் தெரிந்து கொள்ள நமது News4 Tamil இணையதளத்தையும் முகநூல் பக்கம் மற்றும் ட்விட்டர் பக்கங்களை பின் தொடருங்கள்.

மேலும் தொடர்ந்து நமது செய்திகளை உடனுக்குடன் வாட்ஸ் ஆப்பில் தெரிந்து கொள்ள இந்த இணைப்பை கிளிக் செய்து வாட்ஸ் ஆப் மூலம் ACT NEWS என டைப் செய்து அனுப்பவும்.

Previous articleசாலை அமைக்க தமிழக மக்கள் தானாக மனமுவந்து நிலத்தை அளிக்க வேண்டும் தமிழக முதல்வர் வேண்டுகோள்
Next articleஅவருடைய சமூக பொறுப்பு அவ்வளவு தான்! இயக்குனர் ஷங்கரை விமர்சித்த சீமான்