அமீரகத்தில் தொடங்கப்பட்ட கட்டுமான பணிகள்

0
115

அமீரகத்தில் தற்போது செயல்பட்டு வரும் எதிகாத் தேசிய ரெயில்வே திட்டம் கடந்த 2009-ம் ஆண்டில் தொடங்கப்பட்டது. இந்த திட்டத்தில் சவுதி அரேபியா மற்றும் ஓமன் நாடு வரை மொத்தம் 1,200 கி.மீ. தொலைவு கொண்ட போக்குவரத்து பாதையாக உருவாக்கப்பட உள்ளது. மேலும் இந்த துபாய்- புஜேரா ரெயில்வே தடத்தில் 35 பாலங்கள் அமைய உள்ளன. இதற்கான பணிகள் அந்த மலைப்பகுதியில் தொடங்கியுள்ளது.

பிரமாண்டமான எந்திரங்களை கொண்டு மலையை குடைந்து நூற்றுக்கணக்கான தொழிலாளர்கள் உதவியுடன் இந்த பணிகள் நடந்து வருகிறது. துபாயில் இருந்து தொடங்கும் இந்த ரெயில் வழித்தடம் சார்ஜா வழியாக புஜேரா துறைமுகத்தை சென்றடைகிறது. இது குறித்த வீடியோ பதிவை எதிகாத் ரெயில்வே வெளியிட்டுள்ளது. அதில் கிழக்கு கடற்கரை பகுதி வழியாக ரெயில்கள் செல்வது போன்று கிராபிக் காட்சிகள் சித்தரிக்கப்பட்டுள்ளன.

Previous articleஇந்த உறுப்பையும் பாதிக்குமா கொரோனா வைரஸ்
Next articleகுன்னம் தொகுதி அதிமுக எம்.எல்.ஏ.வுக்கு கொரோனா பாதிப்பு!