இரவு சமையல் அறையில் இதை எழுதினால் ஐஸ்வரியம் பெருகும்,!

Photo of author

By Kowsalya

இரவு சமையல் அறையில் இதை எழுதினால் ஐஸ்வரியம் பெருகும்,!

நம் வீட்டில் ஐஸ்வர்யம் பெருக வேண்டுமென்றால் மகாபெரியவர் அதற்கான எளிமையான முறையை சொல்லியிருக்கிறார். அது என்னவென்று இந்த பதிவில் நாம் பார்ப்போம்.

இரவில் இந்த எழுத்துக்களை எழுதினால் ஐஸ்வர்யம் பெருகும் என்று சொல்லப்படுகிறது.

எப்பொழுதுமே ஒரு வீட்டின் சமையலறையானது மிகவும் சுத்தமாக இருந்தது என்றால் அந்த வீட்டில் லட்சுமி கடாட்சம் இருக்கும் என்று சொல்லப்படுகிறது. அதனால் நம் வீட்டில் இருக்கும் பெண்கள் சமையல் அறையையும், நாம் பயன்படுத்துகின்ற பாத்திரத்தையும், சமையல் அடுப்பையும் மிகவும் சுத்தமாக வைத்திருப்பார்கள்.

ஒரு சில பெண்கள் இரவு தூங்கும் முன் அடுப்பை நன்றாக சுத்தம் செய்து விட்டு தூங்குவார்கள். ஆனால் இன்றைய காலகட்டத்தில் நாம் மிக அவசர காலத்தில் உள்ளதால் அடுத்த நாள் காலையில் சுத்தம் செய்து கொள்ளலாம் என நினைத்து தூங்கிவிடுவார்கள்.

இரவு நன்கு சுத்தம் செய்துவிட்டு காலையில் சிறிய துணி கொண்டு துடைத்து விட்டு நாம் வேலைகளை ஆரம்பிக்கலாம். ஆனால் ஒரு சில பெண்கள் காலையில் எழுந்து அடுப்பை சோப்பு போட்டு நன்றாக துடைத்துக் கொண்டு இருப்பார்கள். இது மிக மிக தவறான செயல். இது எக்காரணம் கொண்டும் செய்யக்கூடாது.

இரவு நாம் சாப்பிட்ட பாத்திரத்தை எல்லாம் கழுவி விட்டு, அடுப்பை நன்கு சுத்தமாக துடைத்துவிட்டு, அடுப்பு மேடையையும் நன்றாக சுத்தமாக துடைத்து விட்டு தான் தூங்கச் செல்ல வேண்டும்.

இப்படி துடைத்துவிட்டு ஒரு சிறிய கோலம் போட்டு கீழே “ஸ்ரீ அக்ஷயம்” என்று எழுதி வைத்தால் லட்சுமி கடாட்சம் பெருகும் என மகாபெரியவர் கூறுகிறார்.

அடுத்த நாள் காலையில் சிறிய துணி கொண்டு மேலாக துடைத்துவிட்டு சமையல் முழுவதும் செய்து விட்டு அதன் பிறகு சுத்தம் செய்யும்போது கோலத்தையும் சுத்தம் செய்துவிடலாம்.

இப்படி ஒரு வீட்டில் தினமும் செய்து வந்தால் அந்த வீட்டில் லட்சுமி கடாட்சம் பெருகும் தனவரவு பெருகும் மற்றும் உணவிற்கு பஞ்சம் இருக்காது என சொல்லப்படுகிறது.