கரீபியன் பிரீமியர் லீக் கிரிக்கெட் தொடர் வெஸ்ட் இண்டீசில் நடைபெற்று வருகிறது. இதன் இறுதி போட்டியில் மூன்று முறை பட்டம் வென்ற கிரண் பொல்லார்டு அணியான டிரின்பாகோ நைட் ரைடர்ஸ் அணியும் செயின்ட் லூசியா ஸோக்ஸ் அணியும் மோதின. டாஸ் வென்ற டிரின்பாகோ நைட் ரைடர்ஸ் அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தன. அதன்படி முதலில் செயின்ட் லூசியா ஸோக்ஸ் அணி பேட்டிங்கை தொடங்கியது. டிரின்பாகோ நைட் ரைடர்ஸ் அணியின் பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் செயின்ட் லூசியா ஸோக்ஸ் அணி 19.1 ஓவரில் 154 ரன்கள் எடுத்து அனைத்து விக்கெட்டையும் இழந்தது.
இதன் மூலம் டிரின்பாகோ நைட் ரைடர்ஸ் அணிக்கு 155 ரன்கள் இலக்காக நிர்ணயம் செய்யப்பட்டது. பின்னர் களமிறங்கிய நைட் ரைடர்ஸ் அணி 18.1 ஓவரில் 157 ரன்கள் எடுத்து 8 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. அந்த அணியில் அதிகபட்சமாக சிம்மொன்ஸ் 49 பந்துகளில் 84 ரன்கள் குவித்தார். ஆட்ட நாயகன் விருதை சிம்மொன்சும் தொடர் நாயகன் விருதை பொல்லார்ட்டும் தட்டிச் சென்றனர்.