ஜி20 உச்சிமாநாடு இந்த ஆண்டு இறுதியில் நடைபெறும்

0
117

அபுதாபி கசர் அல் வதன் அரண்மனையில் அமீரக துணை பிரதமரும், ஜனாதிபதி விவகாரத்துறை மந்திரியுமான ஷேக் மன்சூர் பின் ஜாயித் அல் நஹ்யானை இந்திய பிரதமரின் ஜி7 மற்றும் ஜி20 உச்சி மாநாட்டுக்கான அரசு சிறப்பு பிரதிநிதி சுரேஷ் பிரபு நேற்று சந்தித்து பேசினார். அப்போது இரு நாடுகளுக்கும் இடையே இருந்து வரும் உறவுகள் குறித்தும், இந்த உறவை மேம்படுத்த வேண்டியதன் அவசியம் குறித்தும் பேசப்பட்டது. மேலும் பொருளாதார ஒத்துழைப்பை அனைத்து துறைகளிலும் அதிகரிக்க வேண்டியதன் முக்கியத்துவம் பற்றி விவாதிக்கப்பட்டது.

இதன் மூலம் இரு நட்பு நாடுகளுக்கும், மக்களுக்கும் பயனளிக்கும் வகையில் இருக்குமாறு பார்த்துக்கொள்ள வேண்டும் என தெரிவிக்கப்பட்டது. ஜி20 நாடுகள் கூட்டமைப்பில் இந்தியா, அமீரகம் ஆகிய 2 நாடுகளும் உறுப்பினர்களாக இருந்து வருகின்றன. இந்த நிலையில் வருகிற நவம்பர் மாதம் 20 மற்றும் 21 ஆகிய 2 நாட்கள் சவுதி அரேபியாவில் ஜி20 உச்சிமாநாடு நடக்க இருக்கிறது.

Previous articleவருமானம் வழக்கில்  சிக்கிய ஆஸ்கார்  நாயகனுக்கு உயர்நீதிமன்றம் நோட்டீஸ்!
Next articleஅமெரிக்கா ஓபன் டென்னிஸ் : அரையிறுதிக்கு முன்னேறிய ரஷ்ய வீரர்