தினமும் மூன்று சொட்டு இரவில் முகத்தில் தடவினால் போதும் இனி நீங்கள்தான் அழகாக இருப்பீங்க!
ஒரு சிலர் மிக அழகாக இருப்பார்கள் ஆனால் அவர்களது முகத்தில் உள்ள கரும்புள்ளிகள் முகப்பருக்கள் அவர்களது அழகை கெடுக்கும்.
மேலும் கடைகளில் கிடைக்கும் க்ரீம்களை வாங்கி பயன்படுத்தும் பொழுது அதிகமான தோல் சுருக்கங்கள் விரைவில் வந்துவிடும்.
இரவில் மூன்று சொட்டு இதை பயன்படுத்தினால் உங்கள் முகம் பளிச்சென்று மாறி மற்றவர்கள் என்ன செய்கிறாய் என்று கேட்கும் அளவிற்கு முகம் அழகாக மாறும்..
தேவையான பொருட்கள்:
1. கற்றாழை ஜெல்
2. டீ ட்ரீ ஆயில்
3. ரோஸ் வாட்டர்.
செய்முறை:
1. இயற்கையான முறையில் செய்வதனால் இயற்கையான கற்றாழையை பிடுங்கி அதன் இருபுறமும் இருக்கும் முட்களை சீவி எடுத்து விட்டு உள்ளே இருக்கும் சோற்றை மட்டும் எடுத்து நன்றாக ஜெல்லி போல் ஆக்கிக் கொள்ளவும்.
2. இது ஒரு கண்ணாடி பாட்டில்களில் வைத்துக் கொள்ளலாம்.
3. இதில் நான்கு சொட்டு அளவிற்கு நீலகிரி தைலம் அதாவது டீ ட்ரீ ஆயில் என்று சொல்லக்கூடிய எண்ணெய்யை சேர்க்கவும்.
4. ஒரு ஸ்பூன் அளவுக்கு ரோஸ் வாட்டர் ஊற்றி கலந்து கொள்ளவும்.
இதை இரவு படுக்கும் முன் கையில் எடுத்து முகம் முழுவதும் பூசி விட்டு காலையில் எழுந்து முகம் கழுவி விடலாம். இப்படி தொடர்ந்து செய்துவரும்போது மற்றவர்கள் எப்படி நீ அழகாக இருக்கிறாய்? என்று கேட்கும் அளவிற்கு உங்கள் முகம் அழகாக மாறிவிடும்.