இந்த உலகத்தில் அனைத்து நாடுகளுக்கும் காலநிலை என்பது முக்கியமான ஒன்றாகும். காலநிலையை பொறுத்துதான் ஒரு நாட்டின் பொருளாதாரம் தீர்மானிக்கப்படும். உலக வெப்பநிலை கடந்த ஐந்தாண்டுகளில், முன்னெப்போதும் இல்லாத அளவு அதிகரித்ததாகத் ஐக்கிய நாட்டு நிறுவனமும்தெரிவிக்கப்பட்டுள்ளது. உலக வெப்பநிலை உயர்வை ஒன்றரை டிகிரி செல்சியஸாகக் கட்டுப்படுத்துவது அந்த ஒப்பந்தத்தின் இலக்கு. உலக வெப்பமாதல் தொடர்ந்தால் பேரழிவுகள் ஏற்படக்கூடும். வானிலை மாற்றம், வெப்ப அலைகள், வறட்சி, வலுவான சூறாவளிகள் ஆகியவை ஏற்படலாம் என்பதை அவர் சுட்டினார். இந்த ஆண்டு, புவியின் காற்றுமண்டலத்தில் பசுமைக்கூட வாயுக்களின் அளவும் முன்னெப்போதும் இல்லாத அளவு உயர்ந்துள்ளது.