தனுஷ் பட இயக்குனருக்கு பணத்தின் மீது ஆசையா?

தனுஷ் நடித்த பொல்லாதவன் படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகம் ஆனவர் இயக்குனர் வெற்றிமாறன். இவர் ஒரு தயாரிப்பாளர். இவர் தனுஷை மையமாக வைத்தே தனது படங்களை இயக்கி வருகிறார். ஆடுகளம், வடசென்னை மற்றும் அசுரன் போன்ற வெற்றி படங்களை கொடுத்தவர். தற்போது சூர்யா நடிக்கும் வாடிவாசல் படத்தை இயக்கி வருகிறார்.

தனுஷ் பட இயக்குனருக்கு பணத்தின் மீது ஆசையா?

மேலும் தனுஷை வைத்து மேலும் ஒருபடத்தை இயக்க திட்டமிருந்த நிலையில் தற்போது மூன்றவதாக ஒரு படத்தை இயக்குவதற்கு முன்பணம் வாங்கி இருப்பதாக தற்போது செய்தி வெளியாகியுள்ளது. ஆம் தயாரிப்பாளர் எல்ரெட் குமார் அவர்கள் தயாரிக்கும் படத்தை இயக்குகிறார் என்கின்ற முதல் கட்ட தகவல் வெளியாகியுள்ளது.

ஒரே நேரத்தில் மூன்று படங்கள் இயக்குவது ரசிகர்களுக்கு மகிழ்ச்சி என்றாலும் கூட ஒரு பக்கம் பயமும் இருந்து வருகிறது. அதாவது தொடர் வெற்றி படங்களை கொடுத்தவர் தற்போது பணத்திற்கு ஆசைப்பட்டு தரமற்ற படங்களை கொடுத்துவிடுவார் என்கிற பயம் தான். இது எப்படியோ படம் நன்றாக ஓடினால் சரி.

Leave a Comment