நச்சுவாயு கொண்ட கிரகமான சுக்கிரனை ஆய்வாளர்கள் பல்வேறு ஆராய்ச்சிகள் மேற்கொள்ளபட்டு வருகின்றனர். இந்த நிலையில் அந்த கிரகத்தில் பாஸ்பைன் எனும் வாயுவை கண்டுபிடித்துள்ளனர். இந்த பாஸ்பைன் வாயு இருப்பதால் அதில் நுண்ணுயிர்கள் இருக்கலாம் என ஆய்வாளர்கள் கருதுகின்றனர். சுவாசவாயு இல்லாத சமயத்தில் பூமியில் வாழும் நுண்ணுயிர்கள் கூட பாஸ்பைன் எனும் வாயுவை வெளியிடுவதாக கூறுகின்றனர்.
இன்னும் வேறு சில கோள்களிலும் ஆய்வாளர்கள் ஆராய்ச்சிகள் மேற்கொள்ளபட்டு வருகின்றனர். ஆனால் பாஸ்பைன் வாயுவை மட்டும் வைத்து உயிர்கள் இருக்கலாம் என்று முழுமையாக கூறமுடியாது என்று வேறு சிலர் கூறுகின்றனர். மேலும் நச்சுவாயு மிகுந்த சுக்ரனில் வெப்பநிலை 471 டிகிரி செல்சியஸ் வரை பூமிக்கு அருகில் இருக்கும் என்று கூறப்படுகிறது.