போக்குவரத்து காவல்துறையினர் கொடுத்த தொல்லையால் ஆட்டோ ஓட்டுனர் தற்கொலைக்கு முயற்சி !!

0
125

சென்னையில் போக்குவரத்து காவல்துறையினரால் ஆட்டோ ஓட்டுனர் தற்கொலை செய்துகொள்ள முயன்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சென்னை கொட்டிவாக்கம் பகுதியை சேர்ந்த முத்துக்குமார் என்பவர், ஆட்டோ ஓட்டுநராக இருந்து வருகிறார். இவரது மனைவி மாற்றுத்திறனாளி மற்றும் இவருக்கு மூன்று மகள்கள் உள்ளனர். கடந்த 20 நாட்களுக்கு முன், போக்குவரத்து காவல்துறையினர் சாலை விதிகளை மீறியதாக அபராதம் விதிக்கப்பட்டு, ஏடிஎம் கார்டு கேட்டதாகவும் , அதற்கு ஏடிஎம் கார்டு இல்லை என முத்துக்குமார் தெரிவித்த பின்னரும் ,காவல்துறையினர் வற்புறுத்தியதாக கூறப்படுகிறது.

இதனால் ,மன உளைச்சலுக்கு ஆளான ஆட்டோ ஓட்டுனர், சென்னையை அடுத்த பலவாகம் அரசு உயர்நிலை பள்ளி எதிரே உள்ள செல்போன் டவர் மீது ஏறி போராட்டத்தில் ஈடுபட்டார்.தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த நீலாங்கரை காவல்துறையினர் தீயணைப்பு துறையினர் உதவியுடன் ஆட்டோ ஓட்டுனரை பத்திரமாக மீட்டனர்.

தற்கொலை செய்து கொள்ள முயன்றதாக அவர் மீது காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Previous article2 கிலோ தங்கம் 58 கிலோ வெள்ளியெல்லாம் பத்தாது:! வரதட்சனை கொடுமை படுத்திய கணவன் வீட்டார்! போஸ்டர் அடித்து ஒட்டிய மருமகள்!
Next articleமீண்டும் கர்நாடக அணையிலிருந்து திறக்கப்படும் நீரின் அளவு அதிகரிப்பு !!