நெய் உடலுக்கு நல்லதா? கெட்டதா ? வெறும் வயிற்றில் நெய் ஒரு ஸ்பூன் சாப்பிடுவதால் என்ன நடக்கும்?

0
327

அனைவரும் நெய் என்றாலே அய்யய்யோ கொலஸ்ட்ரால் என்று பயந்து ஓடி விடுவார்கள். ஆனால் உங்களுக்குத் தெரியுமா? நெய் மிகுந்த நன்மைகள் கொண்ட ஒரு பொருளாகும். மனிதர்களின் உடலை ஆரோக்கியமாக வைத்துக் கொள்வதில் நெய்யுக்கும் பங்கு உண்டு.

காலையில் வெறும் வயிற்றில் நெய் சாப்பிடுவதால் என்ன நன்மைகள் நடக்கும் என்று பார்ப்போம் வாருங்கள்!

காலையில் வெறும் வயிற்றில் நெய் சாப்பிட்டு சுடு தண்ணீர் ஒரு டம்ளர் குடித்தால் ஏராளமான நன்மைகள் உண்டு.

1. வெண்ணெய் விட நெய்யில் குறைந்த அளவு கொழுப்பு உள்ளதால் உண்ணும் உணவு சீக்கிரத்தில் செரிமானம் அடைந்துவிடும். அதனால் கொலஸ்டிரால் உள்ளவர்கள் நெய்யை சாப்பிடலாம்.

2. அனைவரும் நெய் சாப்பிட்டால் உடல் பருமன் அதிகரிக்கும் என்று நினைக்கிறார்கள் ஆனால் உடல் குறையும். மெட்டபாலிச்தை அதிகரித்து உடல் கொழுப்புகளை குறைக்கும்.

3. வெறும் வயிற்றில் நெய் சாப்பிடும் பொழுது மூளையில் செல்கள் தூண்டப்பட்டு சுறுசுறப்புடனும் செயல்பட உதவுகிறது.

4. இரத்தத்தை சுத்தபபடுத்தி இரத்த சுழற்சியை மேம்படுத்துகிறது.

5. மூட்டு தேய்மானம் அடைவதை தடுத்து மூட்டு வலி வராமல் தடுக்கிறது.

6. உடம்பிலுள்ள அனைத்து செல்களையும் தூண்டி புத்துணர்வுடன் செயல்பட வைக்கிறது.

7. சரும ஆரோக்கியம் மேம்பட உதவுகிறது. சரும வறட்சியை தடுத்து பருக்கள் வராமல் பாதுகாக்கிறது. சொரியாசிஸ் போன்ற சரும பிரச்சனையில் இருந்து தடுக்கிறது.

8. அதிக காரம், மது அருந்துபவர்கள் குடல் விரைவில் புண் ஆகிவிடும். அப்படிப்பட்டவர்கள் நெய்யை சாப்பிட்டால் குடல் புண் ஆறும். மலச்சிக்கல் நீங்கி செரிமானத்தை துரிதப்படுத்தும்.

9. புற்று நோய் உள்ளவர்கள் நெய் காலையில் வெறும் வயற்றில் உட்கொண்டால் புற்று நோய் செல்கள் அழிக்கும்.

10. நெய்யில் உள்ள நல்ல கொழுப்புகள் உடலின் செயல்பாட்டுக்கு பெரிதும் உதவி தலைமுடி பிரச்னைக்கு கூட உதவுகிறது. பொடுகை விரட்டுகிறது.

எனவே நெய்யை ஆரோக்கியம் அற்றது என கருதி சாப்பிடாமல் இருந்து விடாதீர்கள். வெயில் படாத இடத்தில் வைத்து உபயோகித்தால் நல்லது. குளிர் சாதனப்பெட்டியில் வைத்து பயன்படுத்த வேண்டாம்.

Previous articleதல அஜித்துக்கு மகனாக மாற உள்ள தளபதி விஜய்யின் மகன்! மகிழ்ச்சியில் ரசிகர்கள்!
Next articleதிருஷ்டி பொருளை மிதித்தால் என்ன நடக்கும்? அதன் பிறகு செய்ய வேண்டியது என்ன?