மனைவி மற்றும் மாமியாரின் தொல்லையால் வெளிநாட்டில் இருந்து வந்த புதுமாப்பிள்ளை வீட்டில் தூக்கு போட்டு கொண்ட சம்பவம் தேனியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தேனி மாவட்டத்தைச் சேர்ந்தவர் கோபிநாத் . வயது 30 . இவருக்கும் ஜெயப்பிரியா என்ற பெண்ணுக்கும் கடந்தாண்டு திருமணம் முடிந்துள்ளது.
வெளிநாட்டில் வேலை செய்து கொண்டிருந்த கோபிநாத் திருமணம் முடிந்த பிறகு சவுதி அரேபியா சென்று விட்டார்.
கோபிநாத் வெளிநாட்டிற்கு சென்ற பிறகு ஜெயப்ரியா தனது தாய் வீட்டிற்கு சென்று விட்டார். கடந்த 13ம் தேதி என்று வெளிநாட்டில் இருந்து திரும்பிய கோபிநாத் மனைவியை அழைத்து வர மாமியார் வீடு சென்றுள்ளார்.
ஆனால் ஜெயப்பிரியா அவருடன் வர மறுத்துள்ளார். மேலும் ஜெயப்பிரதாவின் தந்தை பிரேம்குமார், தாயார் கமலா, மற்றும் அண்ணன் நிஜந்தன் ஆகியோர் கோபிநாத்தை திட்டியுள்ளனர்.
அதனால் மனமுடைந்து விரக்தி அடைந்த கோபிநாத் வீட்டிற்கு சென்று தற்கொலை செய்து கொண்டுள்ளார். மேலும் ஒரு கடிதத்தையும் எழுதி வைத்துள்ளார்.
தகவலறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து கோபிநாத்தின் உடலை மீட்டு மற்றும் கடிதத்தையும் கைப்பற்றினார்கள்.
அந்த கடிதத்தில் ” எனக்கு வாழ விருப்பமில்லாததால் நான் இந்த தற்கொலை முடிவுக்கு வந்துள்ளேன். என் சாவிற்கு 7 பேர் காரணம். மனைவி ஜெயப்பிரியா, மாமனார் பிரேம்குமார், மாமியார் கமலா, மைத்துனர் நிஜந்தன் மற்றும் ஜெயப்பிரியாவின் உறவினர்களான விமலா, வாசியம்மாள், நர்மதா இந்த ஏழு பேர் என் சாவிற்கு காரணம்” என எழுதி வைத்துள்ளார். மேலும் “என் சாவிற்கு காரணமான அவர்களுக்கு உண்மையான தண்டனை கிடைத்த பின்னரே என் உடலை எரிக்க வேண்டும்” என்றும் அதில் எழுதியிருந்தார்.
இந்த கடிதத்தை படித்த போலீசார் கோபிநாத்தின் மனைவி, மாமனார், மாமியார், மைத்துனர் ஆகிய நால்வரை கைது செய்தனர் மேலும் மூவரை தேடி வருகின்றனர்.
விசாரணையில் தெரியவந்த உண்மை என்னவென்றால் வெளிநாட்டில் வேலை பார்த்து வந்த கோபிநாத்தின் சம்பளத்தை கேட்டு மனைவி, மாமியார் தொல்லை கொடுத்து வந்ததாக தெரிகிறது. மேலும் இவர்களின் தொல்லை தாங்க முடியாமல் சவுதி அரேபியாவில் 10 நாட்களுக்கு முன் தற்கொலை செய்ய முயற்சித்ததாகவும் சொல்லப்படுகிறது. தொடர்ந்து அடுத்த கட்ட விசாரணை நடந்து வருகிறது.