மருத்துவ மேற்படிப்புக்கான சேர்க்கையில் முறைகேடு – விசாரணை நடத்த உயர்நீதிமன்றம் உத்தரவு!

0
109

மருத்துவ மேற்படிப்பிற்கான சேர்க்கை நடத்தப்பட்டுள்ளது. அதில் முறைகேடு நடந்ததாக வழக்கு தொடுக்கப் பட்டிருந்தது. அந்த வழக்கை சிபிசிஐடி விசாரிக்கும்படி தற்போது உயர் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

இந்தக் கல்வியாண்டில் நடந்த மாணவர் சேர்க்கையின்போது 74 காலி இடங்களை தனியார் கல்லூரிகளுக்கு மீண்டும்  வழங்கியுள்ளனர் என்றும்  தனியார் மருத்துவ கல்லூரிகள் குறைந்த மதிப்பெண் பெற்ற மாணவர்களை பணம் வாங்கிக்கொண்டு மேற்படிப்பிற்கான இடத்தை ஒதுக்கி தருவதை, நீதிபதி ஆனந்த வெங்கடேஷ் அவர்கள் சுட்டிக் காட்டியுள்ளார்.

இவ்வாறு முறைகேடு நடப்பதால் இது சமுதாயத்திற்கு பெரிய ஆபத்தை ஏற்படுத்தியுள்ளதாக, நீதிபதி ஆனந்த வெங்கடேஷ் அவர்கள் வேதனை தெரிவித்துள்ளார். மருத்துவக்கல்வி துறையின் இயக்குனரக அதிகாரிகளுக்கும் மற்றும் தனியார் கல்லூரிகளுக்கும் இடையில் நடந்த இந்த சதியில் சம்பந்தப்பட்ட நபர்கள் யார்? 

மாணவர்களின் பெற்றோரிடம் எவ்வளவு ரூபாய் தொகை தனியார் கல்லூரிகள் வசூலித்துள்ளது? போன்ற கேள்விகளை நீதிபதி முன்வைத்துள்ளார். இவை அனைத்தையும் விசாரிப்பதற்காக உதவி கமிஷனர் பதவிக்கு குறைவில்லாத ஒரு தகுதியுடைய அதிகாரியாக டி.ஜி.பி. நியமிக்கப்பட வேண்டும் என்று நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.

Previous articleஇனிப்பான செய்தி சொன்ன பாஜக தலைமை…! பயங்கர குஷியில் வானதி சீனிவாசன்…!
Next articleதமிழக முதலமைச்சரிடம் பகிரங்கமாக உதவி கேட்கும் பிரபல இயக்குனர்!