பயங்கரவாதத்தை ஆதரித்து வரும் நாடுகள் மீது ஒழுங்கமைப்பு அடிப்படையில் நடவடிக்கை எடுத்தல் வேண்டும் – பிரதமர் மோடி வலியுறுத்தல்!

Photo of author

By Parthipan K

பயங்கரவாதத்தை ஆதரித்து வரும் நாடுகள் மீது ஒழுங்கமைப்பு அடிப்படையில் நடவடிக்கை எடுத்தல் வேண்டும் – பிரதமர் மோடி வலியுறுத்தல்!

Parthipan K

பிரிக்ஸ் மாநாடு வருகின்ற 2021 ஆம் ஆண்டுடன் 15 ஆவது  ஆண்டினை பூர்த்தி செய்ய  உள்ளது. ரஷ்யா தலைமையில் நடைபெற்ற பிரிக்ஸ் மாநாட்டில் இந்திய பிரதமர் நரேந்திர மோடி காணொலி காட்சி வாயிலாக கலந்து கொண்டு உரையாற்றி உள்ளார்.

அப்போது பேசிய அவர், உலகம் தற்போது எதிர்கொண்டுவரும் பெரிய பிரச்சனை பயங்கரவாதம் தான் என்றார். பயங்கரவாதத்தை ஆதரிக்கும்  நாடுகள் மீது  ஒழுங்கமைப்பு அடிப்படையில் நடவடிக்கை எடுத்தல் வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார்.

பயங்கரவாதத்தை ஆதரித்து வரும் நாடுகளே அதன் விளைவுகளுக்கு பொறுப்பேற்கிறதா  என்பதனை உறுதி செய்தல் வேண்டும் என்றும் சுட்டிக்காட்டியுள்ளார் பிரதமர் மோடி. அடுத்த ஆண்டு நடக்கவிருக்கும் பிரிக்ஸ் மாநாடு இந்தியா தலைமையில் நடக்கவிருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.

பிரதமர் மோடி இந்தியா தலைமையில் நடக்க இருக்கும் பிரிக்ஸ் மாநாட்டின்போது சென்ற ஆண்டு நடந்த மாநாட்டில் எடுத்த முடிவுகளை மதிப்பீடு செய்தல் வேண்டும் என்று குறிப்பிட்டுள்ளார். லடாக் எல்லையில் கடந்த சில நாட்களாக பிரச்சினை நீடித்து வரும் இந்நிலையில், சீனா அதிபர் ஜின்பிங்கும், மோடி பங்கேற்ற இதே மாநாட்டில் பங்கேற்றுள்ளாராம்.