பிரதமர் மோடியிடம் 15வது நிதிக்குழுவினர் தங்களது இறுதி அறிக்கையை நேரில் சென்று வழங்கினர்!

0
77

பிரதமர் மோடியிடம் 15வது நிதிக்குழுவினர், ஐந்து ஆண்டுகளுக்கான நிதி பகிர்வு இறுதி அறிக்கையை நேரில் சென்று வழங்கியுள்ளனர். என்.கே.சிங். தலைமையில் இக்குழுவானது செயல்பட்டு கொண்டு வருகிறது.

இக்குழுவின் முக்கிய பணி என்னவென்றால், மத்திய அரசு மற்றும் மாநில அரசுகளின் இடையில் மத்திய வரிகளை பகிர்ந்து அளிப்பது குறித்து அனைத்து வழிமுறைகளையும் பதிவிட்டு கொடுக்கும் என்பதே. 

தற்போது இந்த குழு 2020 – 2021 ஆம் ஆண்டிற்கான மத்திய வரியிலிருந்து 41% அனைத்து மாநிலங்களுக்கும் அளிக்கும்படி அரசுக்கு பரிந்துரை செய்துள்ளது. இவை குறித்த அனைத்து விவரங்களும் அந்த அறிக்கையின் எழுத்து வடிவமாக பதிவாகி உள்ளதாம்.

அத்துடன் மேலும் ஒரு சதவீதம் ஜம்மு, காஷ்மீர் மற்றும் லடாக் உள்ளிட்ட புதிதாக உருவாக்கப்பட்ட யூனியன் பிரதேசங்களுக்கும் அரசு சார்பில் நிதி பகிர்வுக்கு பரிந்துரை செய்யப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் இந்த குழு, நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமனை இன்று சந்தித்து இந்த அறிக்கையை வழங்குகிறது.

author avatar
Parthipan K