பொதுவாக நம் தமிழ்ப் பாரம்பரியத்தில் நாம் உண்ணும் உணவில் சேர்க்கும் ஒவ்வொரு பொருளையும் தனித்தனியே மருத்துவ குணங்களை கொண்டுள்ளது.மருத்துவ குணங்களைக் கொண்ட இந்த உணவுப் பொருள் தான் அடுத்த தலைமுறைக்கும் நாம் சொல்லித் தரும் சிறப்பான வகைகளில் ஒன்று.
இப்படிப்பட்ட மருத்துவ குணம் கொண்ட ஒரு உணவு பொருளை பற்றித்தான் இந்தப்பதிவில் பார்க்கப் போகின்றோம். அது என்னவென்றால் பொட்டுக்கடலை.பொட்டுக் கடலையில் பல்வேறு ஊட்டச்சத்துக்கள் உள்ளன. அது என்னென்ன பிரச்சனைகளை தீர்க்கிறது என்று பார்ப்போம்.
1. பொட்டுக்கடலையை சாப்பிடுவதனால் ரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவு குறைகிறது. பொட்டுக்கடலை குளுக்கோசை உறிஞ்சி சர்க்கரையை குறைக்கிறது.அதனால் நீரிழிவு நோயாளிகள் காலையில் பொட்டுக் கடலையை மென்று தின்று வந்தால் சர்க்கரையின் அளவு குறையும். அதே போல் இரவு படுக்கச் செல்லும் முன் சிறிதளவு பொட்டுக் கடலையை மென்று சாப்பிட்டு விட்டு படுக்கலாம்.
2. அதேபோல் இரவில் அடிக்கடி சிறுநீர் கழிக்கும் பிரச்சனை உள்ளவர்களும் பொட்டுக் கடலையை தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் சரியாகும்.
3. பொட்டுக்கடலையை சாப்பிடுவதனால் ஜீரண சக்திக்கு உதவுகின்றது. உடல் பலவீனமானவதை தடுக்கிறது.
4. மூளையின் வேகத்தை துரிதப்படுத்துகிறது.
5. பெண்கள் இதனை தொடர்ந்து சாப்பிட்டு வரும் பொழுது சரும பிரச்சனையில் இருந்து விடுபட்டு மேனியை பளபளக்க செய்கிறது.
6. பொட்டுக் கடலையில் பாஸ்பரஸ் சத்து அதிகமாக உள்ளதால் இரத்தத்தில் உள்ள நச்சுக்களை நீக்கும் தன்மை உடையது.
7. அதேபோல் சிறுநீரகத்தில் உள்ள உப்பையும் நீக்குகிறது.
8. உடல் எடையை குறைக்க விரும்பவர்கள் காலையில் 50 கிராம் பொட்டுக் கடலையை சாப்பிடுவதன் மூலம் உடல் எடையை சீக்கிரமாக குறைக்கலாம் என்று சொல்லப்படுகிறது.
மிகவும் பயன்தரும் பொட்டுக் கடலையை உண்ணும் உணவிலும், தினமும் சாப்பிட்டும் வரும் பொழுது உங்களுக்கு ஏராளமான நன்மைகளை தந்து உடலை பாதுகாக்கிறது.