பாமகவிற்கு எதிராக காடுவெட்டி குரு மகன் கனலரசனை தூண்டிவிட்ட திமுக!

0
216

பாமகவிற்கு எதிராக காடுவெட்டி குரு மகன் கனலரசனை தூண்டிவிட்ட திமுக!

பாமகவின் முக்கிய தலைவர்களில் ஒருவரும் வன்னியர் சங்கத்தின் மாநில தலைவருமான முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் ஜெ குரு அவர்கள் மே 25 2018 நுரையீரல் தொற்று நோய்க் காரணமாக இறந்தார்.

அவர் இறந்த பிறகு அவரது மகன் கனலரசன் மருத்துவர் ராமதாஸினால் ஏற்படுத்தப்பட்ட இரங்கல் கூட்டத்திலும் அதற்குப் பிறகு குரு அவர்களின் சொந்த ஊரில் ஜெ குருவுக்கு என தனி மணிமண்டபம் (செப்டம்பர் 2019) கட்டும் வரை பாமக உடன் இணக்கமாக இருந்தார்.

பிறகு பல்வேறு காரணங்களால் பாமகவில் இருந்து பிரிந்து தனது தந்தையின் கம்பீரமான பெயரில் மாவீரன் மஞ்சள் படை (ஜனவரி 2020) என்ற அமைப்பை உருவாக்கினார்.
அப்பொழுது பத்திரிகையாளர் சந்திப்பில் பேசிய ஜெ குருவின் தங்கை செந்தாமரை பாமகவின் மீது பல்வேறு குற்றச்சாட்டுகளை வைத்தார். ஜெ குரு அவர்களின் மருத்துவத்திற்கு பணம் பாமக தரப்பிலிருந்து தரவில்லை எனவும் ராமதாஸ் வன்னியர்களை ஏமாற்றி வருகிறார் என்றும், பாமகவினர் கனலரசனுக்கு கொலைமிரட்டல் விடுவதாகவும் பல்வேறு குற்றச்சாட்டுகளை வைத்தார்.

இதற்குப் பிறகு ஆங்காங்கே பாமகவினர் மற்றும் மாவீரன் மஞ்சள் படை அமைப்பினரிடையே அடிக்கடி மோதல் உண்டாகியது.

தேர்தல் நெருங்கும் இந்த சமயத்தில் பாமகவின் ஓட்டு வங்கியை உடைக்க வடமாவட்டங்களில் முழுவதும் மாவீரன் மஞ்சள் படை கொடிக்கம்பம் நடப்பட்டு வருகிறது.இதேபோல் ஜெயங்கொண்டத்திலும்
தங்களது கொடியை ஏற்றினர். அந்த கூட்டத்தில் பாமக நிறுவனர் மருத்துவர் ராமதாஸ் மற்றும் இளைஞரணி தலைவர் அன்புமணி ராமதாஸ் அவர்களையும் கடுமையாக விமர்சித்துள்ளார் என்று கூறப்படுகிறது.

இதனால் பெரம்பலூர் மாவட்ட பாமக மாநில துணைத்தலைவர் TMT திருமாவளவன் பாமகவின் ஆதரவாளர்களுடன் வந்து கனலரசன் ஏற்றி வைத்த கொடிக்கம்பத்தை பிடிங்கி எறிந்து சாலை மறியல் போராட்டம் செய்துள்ளார்.

இதைக் கேள்விப்பட்ட கனலரசன் மீண்டும் அந்த இடத்தில் கொடியேற்ற ஜெயங்கொண்டம் நோக்கி வந்துள்ளார். இதனால் அந்த இடத்தில் பிரச்சனை ஏற்படும் என்று அறிந்து காவல்துறையினர் மாவீரன் மஞ்சள் படை தலைவர் கனலரசனையும், பாமகவின் மாநில துணைத் தலைவர் திருமாவளவனயும் கைது செய்துள்ளனர்.

பிறகு சிறிது நேரம் கழித்து பாமகவின் துணை தலைவரை விடுதலை செய்தனர். ஆனால் ஏற்கனவே கனலரசன் மீதுள்ள நிலுவை வழக்கை காரணம் காட்டி அவரை மட்டும் 15 நாள் ரிமண்ட் செய்துள்ளார்கள் காவல்துறையினர். தற்போது திருச்சி சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.

ஜெ குருவின் மகன் கனலரசன் பாமகவை எதிர்ப்பதற்கு காரணம் திமுகவின் கூட்டணியில் உள்ள வாழ்வுரிமைக் கட்சி தலைவர் வேல்முருகனும், திமுகவும் தான் காரணம் என்கிறார்கள் பாமகவினர். பாமகவின் ஓட்டு வங்கியை உடைப்பதற்காக திமுக கனலரசனை வைத்து காய் நகர்த்துவதாக திமுகவின் மீது குற்றம் சாட்டுகிறார்கள்.

ஓட்டுரிமை கூடம் இல்லாத படிக்கிற பையனை இவ்வாறு பாமகவுக்கு எதிராக ஏவி விட்டு கனலரசனின் வாழ்க்கையை சீரழிக்கிறது திமுக எனவும் பல்வேறு தரப்பினர் தனது கருத்துக்களை பதிவிட்டு வருகிறார்கள்.

இதற்கு மாவீரன் மஞ்சள் படையினர் எங்கள் வளர்ச்சி பிடிக்காமல் தான் பாமகவானது ஆளும் அரசையும் காவல் துறையையும் கைக்குள் போட்டுக் கொண்டு பொய்யான வழக்குகளை பதிவு செய்து எங்களை கைது செய்கிறார்கள் என்றும், உங்கள் தொகுதியில் ஸ்டாலின் என்ற பரப்புரையை மேற்கொண்டு அரியலூர் வரும் எதிர்க்கட்சித் தலைவர் ஸ்டாலின் அவர்களை நாங்கள் சந்திக்க இருந்தோம் அந்த சந்திப்பை தடுக்க தான் கனலரசனை அதிமுக அரசின் உதவியோடு காவல்துறை கைது செய்துள்ளது என்றும் குற்றம் சாட்டி வருகிறார்கள்.

ஏற்கனவே உதயநிதி ஸ்டாலின் காடுவெட்டி குரு அவர்களின் இல்லத்திற்கு வந்து அவருடைய உருவப்படத்திற்கு மாலை அணிவித்தார் என்பது குறிப்பிடத்தக்கது‌.

பாமகவின் ஓட்டு வங்கியை உடைக்க முன்பு திருமாவளவன், மேல்முருகனை பயன்படுத்தியது போன்று தற்போது ஜெ குரு மகன் கனலரசனை திமுக பயன்படுத்தி வருகிறது என அரசியல் ஆலோசகர்கள் பலர் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

Previous articleவிஷ மனிதரைக் கண்டு பயந்து நிற்கும் ஊர் பொதுமக்கள்!
Next articleநிச்சயமாக அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும்! ஹச்.ராஜா எச்சரிக்கை!