தேர்வின்றி 12ம் வகுப்புக்கு ஆள் பாஸ்! எடப்பாடி எடுக்க போகும் அதிரடி நடவடிக்கை!
கொரொனோ தொற்றானது ஓராண்டு காலமாக மக்களை பெரும் சிரமத்திற்கு உள்ளாக்கியது.இந்நிலையில் அனைத்து நாடுகளிலும் மக்கள் நலன் கருதி ஊரடங்கை அமல் படுத்தினர்.அதனைத்தொடர்ந்து கொரோனா தொற்று பரவலின் காரணமாக பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்களுக்கு விடுமுறை அளித்தனர்.மேற்கொண்டு மாணவர்களுக்கு ஆன்லைன் வகுப்பு மூலம் பாடங்கள் எடுக்கப்பட்டது.இந்நிலையில் 40% மாணவர்களே ஆன்லைன் வகுப்பு மூலம் பாடங்களை பயின்றனர்.மீதி மாணவர்களால் பாடங்களை பையில முடியவில்லை.
இதனால் பத்தாம் வகுப்பு பையிலும் அனைத்து மாணவர்களுக்கும் நமது எடப்பாடி பழனிசாமி தேர்வின்றி ஆள் பாஸ் செய்தார்.கொரொனா தொற்றானது குறைந்த நிலையில் பள்ளி மற்றும் கல்லூரிகள் மீண்டும் திறக்கப்பட்டனர்.அதனைத்தொடர்ந்து பதினொன்றாம் வகுப்பு மாணவர்களுக்கும் தேர்வின்றி ஆள் பாஸ் செய்யப்பட்டது.பன்னிரெண்டாம் வகுப்பு மாணவர்களுக்கு மட்டும் பொதுத்தேர்வு நடைபெறும் என அறிவித்தனர்.
இந்நிலையில் தமிழக சட்டமன்ற தேர்தலானது வரும் ஏப்ரல் மாதம் 6 ஆம் தேதி நடைபெற இருக்கிறது.தேர்தலில் மக்களின் வாக்குகளை பெற பல வித திட்டத்தை நாங்கள் ஆட்சிக்கு வந்தால் செய்வோமென வெளியிட்டு வருகின்றனர்.அந்தவகையில் தேனீ மாவட்டம்,போடிநாயக்கனூர் தொகுதியில் நேற்று ஓ.பன்னிர்செல்வம் பிரச்சாரம் மேற்கொண்டார்.அப்போது மாணவர் ஒருவர் “ஐயா 12வது ஆள் பாஸ் போடுங்க ஐயா “என கத்தினார்.அவர் கூறியது ஓ.பன்னிர்செல்வம் காதில் விழுந்து விட்டது போல உங்கள் கோரிக்கையை முதல்வரிடம் கூறி உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.இதைக் கேட்டதும் அந்த மாணவருக்கு பெரும் மகிழ்ச்சி ஏற்பட்டது.