மகிழ்ச்சி வெள்ளத்தில் கல்லூரி மாணவர்கள்! கல்லூரிகள் வெளியிட்ட சூப்பர் அறவிப்பு!
கொரோனா தொற்றானது ஓராண்டு காலமாக மக்களை உலுக்கி எடுத்துவிட்டது.இதனால் பல உயிர்களை இழக்க நேரிட்டது.மக்களின் நலன் கருதி அரசாங்கம் ஊரடங்கை அறிவித்தது.அதனைத்தொடர்ந்து பள்ளி மற்றும் கல்லூரி மாணவ,மாணவிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டது.அவர்களுக்கு ஆன்லைன் வகுப்புகள் மூலம் பாடம் எடுக்கப்பட்டது.அதில் நூற்றுக்கு 60 சதவீத மாணவர்களே ஆன்லைன் மூலம் பாடங்களை கற்றனர்.மீதமுள்ளவர்களால் பாடங்களை கற்க முடியவில்லை.
அதன்பின் கொரோனா தொற்றானது சிறிதளவு குறையவே சில தளர்வுகளுடன் மக்கள் வெளியே செல்ல அனுமதிக்கப்பட்டனர்.அதனையடுத்து பள்ளி கல்லூரிகளும் திறக்கப்பட்டது.மாணவர்கள் பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு சென்று சமூக இடைவெளிகள் பின்பற்றி பாடங்களை பையிலுகின்றனர்.இருப்பினும் தஞ்சாவூர் மாவட்டத்தில் மட்டும் 11 பள்ளிகள் மற்றும் 2 கல்லூரி ஆசிரியர்கள்,மாணவர்கள் என அனைவருக்கும் கொரொனா தொற்றானது உறுதி செய்யப்பட்டுள்ளது.
மேலும் கும்பகோணத்திலுள்ள தனியார் பள்ளிகளில் 25 ற்கும் மேற்பட்ட பள்ளி மாணவர்களுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.இந்நிலையானது அதிகரித்துக்கொண்டே இருப்பதால் தனியார் கல்லூரிகள் அனைவரும் ஆலோசனை நடத்தினர்.அதில் தனியார் கல்லூரிகள் கூறுவது,கல்லூரி மாணவர்களுக்கு ஏப்ரல் 2 ஆம் தேதி முதல் கொரோனா தொற்று காரணத்தால் விடுப்பு அளிக்கப்படும் என மாணவர்களுக்கு மகிழ்ச்சியான செய்தியை வெளியிட்டுள்ளனர்.தற்போது செய்முறை தேர்வுகளுக்கான வேலைகள் நடந்து வருவதாகவும் கூறியுள்ளனர்.
எழுத்து தேர்வுகள் முன்பு நடந்ததை போல ஆன்லைனில் நடக்கும் என்று தெரிய வருகிறது.அதுமட்டுமின்றி அரசாங்கம் விடுமுறை அளிப்பதற்கு முன்னதாகவே தனியார் கல்லூரி விடுமுறை அளிக்க முன் வந்துள்ளது.