Cinema

பிறந்த நாளில் ரசிகர்களை உற்சாகப்படுத்திய கங்கனா

இன்று தனது பிறந்த நாளை ஒட்டி தலைவி திரைப்படத்தின் ட்ரெய்லர் வெளியாக உள்ளதை குறிப்பிட்டு நடிகை கங்கனா ரணாவத் வீடியோ ஒன்றை வெளியிட்டு ரசிகர்களை உற்சாகத்தில் ஆழ்த்தியுள்ளர்.

மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாற்று ‘தலைவி’ என்ற பெயரில் உருவாகி வருகிறது. தலைவி படத்தை ஏ.எல்.விஜய் இயக்க ஜெயலலிதா வேடத்தில் கங்கனா ரணாவத் நடித்துள்ளார். எம்ஜிஆராக அரவிந்த் சாமியும், பிரகாஷ் ராஜ், சமுத்திரகனி, பூர்ணா, மதுபாலா ஆகியோரும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.

தமிழ், தெலுங்கு, இந்தி என 3 மொழிகளில் திரையிட உள்ள தலைவி படத்திற்கு ஜி.வி.பிரகாஷ் இசையமைத்துள்ளார். இந்த நிலையில், தலைவி படம் ஏப்ரல் 23-ம் தேதி ரிலீசாகும் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் தலைவி பற்றிய அப்டேட் அளித்து ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சி கொடுள்ளார் நடிகை கங்கனா ரணாவத்.

https://www.instagram.com/p/CMt2nWsBrsQ/?utm_source=ig_web_copy_link

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள இன்ஸ்டகிராம் பதிவில் தனது பிறந்த நாளான மார்ச் 23ம் தேதி தலைவி படத்தின் ட்ரெய்லர் வெளியிடப்படும் என கூறியுள்ளார். இதுமட்டுமின்றி சிறிய வீடியோ ஒன்றையும் பகிர்ந்த கங்கனா, ஜெயலலிதா சினிமாவில் நுழைந்ததும் அதனை தனதாக்கி கொண்டார். அரசியலில் நுழைந்து தனக்கான ஒரு அடையாளத்தை ஏற்படுத்தி கொண்டார். அவரின் எழுச்சியூட்டும் வாழ்க்கையை தழுவி எடுக்கப்பட்ட தலைவி திரைப்படத்தின் ட்ரெய்லர் வெளியாகியுள்ளது என தெரிவித்துள்ளார்.

Leave a Comment